இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையத்தில் (Unique Identification Authority of India (UIADI)) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.


ஆதார் அலுவலகத்தில் டெக்னிக்கல் அதிகாரி, துணை இயக்குநர், உதவி டெக்னிக்கல் அதிகாரி ஆகிய பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வரும் 8-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


பணி விவரம்: 


இயக்குநர் (Director) - 1 
 துணை இயக்குநர்- 2
டெக்னிக்கல் உதவியாளர் -8
டெக்னிக்கல் அதிகாரி- 3


கல்வித் தகுதி : 


இதற்கு விண்ணப்பிக்க பொறியியல் துறையில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு:


ஆதார் ஆணையத்தில் உள்ள  பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகபட்சமாக 56 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.


தேர்வு செய்யப்படும் முறை:


விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியின் அடிப்படையில் ’Deputation Basis’ எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பதாரர்கள் www.uidai.gov.in-என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். தேவையான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து  அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:


The Director(HR),


Unique Identification Authority of India(UIDAI),


Aadhar Complex,


NTI Layout, Tata Nagar,


Kodigehalli, Technology Centre,


Bangalore - 560092


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 08.01.2023


அறிவிப்பு குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ள https://uidai.gov.in/en/about-uidai/work-with-uidai/current-vacancies.html- என்ற லிங்கை கிளிக் செய்து காணலாம்.




இதையும் வாசிக்க,


Railway Recruitment 2022 : 10-வது தேர்ச்சி போதும் ; தெற்கு இரயில்வேயின் வேலைவாய்ப்பு அறிவிப்பு; எப்படி விண்ணப்பிப்பது?


Trichy Jobs: மாவட்ட சுகாதாரப்பணிகள் அலுவகலத்தில் பணி செய்ய வாய்ப்பு; எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்..!