தெற்கு இரயில்வேயில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு - இன் கீழ் லெவல் -2 முதல் லெவல் - 5 வரையிலான பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
கல்வித் தகுதி:
- லெவல் 2 மற்றும் 3 ஆம் நிலை பணியிடத்திற்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 12- ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
- லெவல் 4 மற்றும் லவெல் 5 ஆகிய பணியிடங்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- டைப்பிஸ் பணி வழங்கப்பட்டால் அதை சிறப்பாக செய்யும் அளவுக்கு டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்.
- ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும். டைப்பிங் படித்ததற்கான சான்றிதழ் வழங்க வேண்டும்.
பிற தகுதிகள்:
விளையாட்டுத் துறை சாதனைகள்
- பிரிவு பி -இன் கீழ் ஜூனியர், சீனியர், இளைஞர் உலகக் கோப்பை, காமன்வெல்த் போட்டிகள், இளைஞர் ஒலிம்பிக்ஸ் சாம்பியன் டிராஃபிக் ஹாக்கி
- பிரிவு சி - காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஏசியன் விளையாட்டுப் போட்டிகள், சவுத் ஏசியன் ஃபெடரேசன் விளையாட்டுப் போட்டிகள்
- மேலே குறிப்பிட்டுள்ள விளையாட்டுப் போட்டிகள் பங்கேற்று வெற்று பெற்றதற்கான சான்றிதழ்களை விண்ணப்ப படிவங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
- லெவல் - 2 - ரூ.19,000
- லெவல்-3 - ரூ.21,700
- லெவல்-4- ரூ.25,500
- லெவல்- 5- ரூ.29,200
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிப்பவர்கள் விளையாட்டுத் துறையில் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டியது அவசியம்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்ப கட்டணம்:
பழங்குடியின/பட்டியலின பிரிவின பெண்கள், முன்னாள் இராணுவத்தினர் ஆகியோருக்கு ரூ.250 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் திட்டம்:
எப்படி விண்ணப்பிப்பது?
இதற்கு தேவையான கல்வி மற்றும் விளையாட்டுத் துறை சான்றிதழ்களுடன் https://iroams.com/rrc_sr_chennai_sports/- என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்தைச் செலுத்தினால் போதும்.
முக்கியமான நாட்கள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.01.2021 23:59 மணி வரை
அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மிசோரம், நாகலாந்து, திருபுரா, சிக்கிம், ஜம்மு, காஷ்மீர், இமாச்சல பிரதேசம், அந்தமான் மற்றும் நிகோபார் , லட்சத் தீவுகள் ஆகிய மாநிலங்களில் இருந்து விண்ணப்பிப்பவர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.01.2021 23:59 மணி வரை ஆகும்.
பணிக்கு விண்ணப்பிக்க - https://iroams.com/rrc_sr_chennai_sports/register1.php
இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு விவரங்களுக்கு https://iroams.com/rrc_sr_chennai_sports/pdfs/RRC_English%203%20pages_.pdf- என்ற லிங்கை கிளிக் செய்து காணவும்.