தமிழ்நாடு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான 'குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பணிபுரிய பாதுகாப்பு அலுவலர் வேலைவாய்ப்பு அறிவிப்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலி பணியிடங்கள் மாவட்ட சமூகநல அலுவலர் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
பாதுகாப்பு அலுவலர்
கல்வித் தகுதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க சமூக சேவை, உளவியல் துறை போன்றவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- கணினி பயன்படுத்தவும், டைப்பிங்க் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.
- தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
- தமிழ் மொழியில் நன்கு பேச, எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இதற்கு மாத ஊதியமாக ரூ.30,000 வழங்கப்பட உள்ளது.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 22 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
மேலே குறிப்பிட்டுள்ள கல்வி மற்றும் இதர தகுதிகள் உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை காஞ்சிபுரம் மாவட்ட சமூகநல அலுவகலத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
முகவரி:
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் பழைய கட்டிடம் முதல் தளம்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகம். காஞ்சிபுரம் -631 501
விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய : https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2022/12/2022122125.pdf
விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.02.2023
மொத்தம் எத்தனை காலி பணியிடங்கள், வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு உள்ளிட்டவற்றை அறிவிப்பின் விவரத்தினை https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2022/12/2022122125.pdf - என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
ஆம் தேதி மாலை 5.45க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்தப் பணி முற்றிலும் ஒப்பந்தம் அடிப்படையிலானது என்றும், பணி நிரந்தரம் செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களின் தொடர்பு எண் மற்றும் முகவரியை தெளிவாக குறிப்பிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது,
மேலும் வாசிக்க..
BEL Walk-IN : பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி; 24-ஆம் தேதி நேர்காணல்!