திருச்சிராப்பள்ளி மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவகலத்தில் தேசிய சுகாதார குழுமத்தின் கீழ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது ஒப்பந்த அடிப்படையிலான பணி. இதற்கு வரும் 26- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  இதற்கான தகுதி விவரங்களை கீழே காணலாம். 

பணி விவரம் : 

  1. ஆய்வக நுட்புநர் (Lab Technician)
  2. துப்புரவு பணியாளார் (Sanitary Worker)
  3. துப்புரவு உதவியாளர் (Sanitary Attender)
  4. பாதுகாவலர் (Security Guard)
  5. மருத்துவமனைப் பணியாளர் (Hospital Worker)
  6. Audiometrician
  7. Speech Therapist 
  8. Audiologist
  9. தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator )
  10. அலுவலக உதவியாளார்
  11. பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (MPHW)
  12. நுண்கதிர்வீச்சாளர் (Radiographer)
  13. செவிலியர் (Mid Level Health Program - MLHP)
  14. சுகாதார ஆய்வாளர் (HI - Makkalai Thedi Maruthuvam)
  15. தரவு உள்ளீட்டாளர்
  16. பல் மருத்துவர்
  17. நகர்ப்புற சுகாதார செவிலியர் (ANU/ UHN)   

மொத்தப் பணியிடம் - 54 

கல்வித் தகுதி:

  • ஆய்வக நுட்புநர் பணிக்கு DMLT படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • துப்புரவு பணியாளர், உதவியாளர், பாதுகாவலர் மற்றும் மருத்துவமனை பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 8 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • Audiometrician பணியிடத்திற்கு சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • Speech Therapist பணியிடத்திற்கு Speech Therapist   துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • Audiologist பணிக்கு Audiplogy துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • தரவு உள்ளீட்டாளர் பணிக்கு கணினி அறிவியல் / கணினி பயன்பாடு பட்டயப்படிப்பு / முதுகலை கணினி பயன்பாடு பட்டயப்படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியில் தட்டச்சு படிப்பு முடித்திருக்க வேண்டும். 
  • அலுவலக உதவியாளார் பணிக்கு பத்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் பணிக்கு எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

 

 

ஊதிய விவரம்: 

பணி இடம் மாத ஊதியம்
ஆய்வக நுட்புநர் (Lab Technician)  ரூ. 13,000
துப்புரவு பணியாளார் (Sanitary Worker) ரூ.8,500
துப்புரவு உதவியாளர் (Sanitary Attender)  ரூ.8,500
பாதுகாவலர் (Security Guard)   ரூ.8,500
மருத்துவமனைப் பணியாளர் (Hospital Worker)  ரூ.8,500
Audiometrician  ரூ.17,250 
Speech Therapist  ரூ.17,000
Audiologist  ரூ.23,000
தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator )  ரூ.13,500 
அலுவலக உதவியாளார்  ரூ.10,000
பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (MPHW)  ரூ.8,500
நுண்கதிர்வீச்சாளர் (Radiographer) - ரூ.13,300
செவிலியர் (Mid Level Health Program - MLHP)  ரூ.18,000
சுகாதார ஆய்வாளர் (HI - Makkalai Thedi Maruthuvam)   ரூ. 14,000
பல் மருத்துவர்  ரூ.34,000
நகர்ப்புற சுகாதார செவிலியர் (ANU/ UHN)  ரூ.14,000
தரவு உள்ளீட்டாளர் ரூ.13,500

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வயது வரம்பு: 

 இந்தப் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் அலுவலக வேலை நாள்களில் படிவத்தினை பெற்றுக் கொண்டு,  நேரிலோ அல்லது விரைவு தபாலிலோ அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 

துணை இயக்குநா்,

சுகாதாரப் பணிகள் அலுவலகம்,

ரேஸ்கோா்ஸ் சாலை,

ஜமால் முகமது கல்லூரி அருகில்,

டி.வி.எஸ். டோல்கேட், திருச்சி - 620 020

விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.12. 2022 (மாலை 5 மணிக்குள்)

அறிவிப்பின் கூடுதல் விவரங்களை https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2022/12/2022121686.pdf'- என்ற லிங்கை கிளிக் செய்து காணவும்.