TNUSRB SI Notification 2025 Released: தமிழ்நாடு காவல்துறையில் SI பணிகளுக்கு ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பை TNUSRB வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் மொத்தம் 1,299 பதவிகளுக்கு காலிப் பணியிடங்கள் இருப்பதாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணபத்தை ஏப்ரல் 7 முதல் மே 3 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களுக்காக எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்ப கட்டணம், முக்கியமான தேதிகள் உள்ளிட்ட பிற விவரங்களை இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
TNUSRB SI:ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி:
- முதலில் tnusrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று ‘Recruitment’ பகுதியைத் தேடுங்கள்
- ‘TNPSC SI அறிவிப்பு 2025’ ஐப் தெரிவு செய்து,விவரங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்
- ஆன்லைனில் படிவத்தை நிரப்பி விட்டு, கேட்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்
- இதையடுத்து, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி படிவத்தைச் சமர்ப்பிக்கவும் (விவரங்களைச் சரிபார்த்த பிறகு)
TN SI ஆட்சேர்ப்பு 2025 விண்ணப்பக் கட்டணம் விவரங்கள்:
பொது வேட்பாளர்களுக்கு ரூ. 500 மற்றும் துறை சார்ந்த வேட்பாளர்களுக்கு (திறந்த மற்றும் துறை சார்ந்த ஒதுக்கீடு இரண்டிற்கும்) ரூ. 1000. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஊதியமானது ரூ. 36,900 முதல் ரூ. 1,16,600 வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNUSRB: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியமானது, காவல்துறை பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான பல்வேறு தேர்வுகளை சிறப்பாக நடத்தி வருகிறது. காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய சீருடைத் துறைகளுக்கு கீழ்கண்ட பதவிகளுக்கான தகுதி வாய்ந்த நபர்களைத் தேர்வு செய்து வருகிறது.காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை) மற்றும் நிலைய அதிகாரி (ஒருங்கிணைந்த தேர்வு), காவல் சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்), காவல் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகை), இரண்டாம் நிலைக் காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் (பொதுத்தேர்வு) உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வுகளை நடத்துகிறது. இந்நிலையில்,தற்போது காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பானையை வெளியிட்டுள்ளது.
Also Read: Optical Illusion: சிங்கம் மறைந்திருக்கிறது...30 வினாடிகளில் கண்டுபிடித்தால், நீங்க மாஸ்தான்!