தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் வேலைவய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) பதவிகளுக்கான நேரடி தேர்வுக்கு இம்மாதம் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கான இலவச பயிற்சி வகுப்பு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடைபெற்று வருகிறது.
கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் சேர..
இப்பயிற்சி வகுப்பிற்கு சேர விருப்பமும், தகுதியுமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைபத்தில் நேரடியாக கலந்து கொள்ளலாம். இப்பணிகாலியிட தேர்வு தொடர்பான விவரங்களுக்கு. https://www.tnusrb.tn.gov.in -என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு,தொலைபேசி எண்கள் வழியே 7811863916 (ம) 9499966026 தொடர்பு கொள்ளலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் கொ. வீர ராகவ ராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
காவல் சார்பு ஆய்வாளர்கள்(தாலுகா)
காவல் சார்பு ஆய்வாளர்கள் (ஆயுதப்படை)
காவல் சார்பு ஆய்வாளர்கள் (தமிழ்நாடு சிறப்பு காவல் படை)
ஆண்கள்: 469
பெண்கள் -152
மொத்த பணியிடங்கள் – 621
கல்வி மற்றும் பிற தகுதிகள்:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மொத்தம் பணியிடங்களில் 20 சதவீத இடங்கள், தமிழ் மொழிவழிக் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 20 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு குறித்து விவரங்களை அறிவிப்பில் காணலாம்.
தேர்வு முறை:
எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, எவ்வித குற்ற வழக்குகளும் இல்லாதவர் என்ற நற்சான்று விசாரணை, ஆகியவற்றின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும்.
எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்றும், சரியான தேதி, தேர்வு மையம் தொடர்பான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்பட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். Quota மற்றும் துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
எப்படி விண்ணப்பிப்பது?
- தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnusrb.tn.gov.in./ என்ற வலைதளபக்கத்திற்கு செல்லவும்.
- ஹோம்பேஜ்- https://cr2022.onlineregistrationform.org/TNU/LoginAction_input.action -என்பதை க்ளிக் செய்யவும்.
- இதில் சுய விவரங்களை பூர்த்தி செய்து முதலில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். அதன்பிறகு விண்ணப்ப படிவத்தில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
- முழு விவரங்களை பூர்த்தி செய்தவுடன் உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்தும் வைத்துகொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2023
இது தொடர்பாக கூடுதல் தகவல்களை https://www.tnusrb.tn.gov.in/pdfs/Notification_en.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
மேலும் வாசிக்க..
DMK Press Meet: அமலாக்கத்துறை மத்திய அரசின் கைப்பாவை, இது ஜனநாயகப் படுகொலை - தி.மு.க.