பா.ஜ.க.-வின் கிளை அமைப்பு போல அமலாக்கத்துறை செயல்படுதாக மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாடியுள்ளார். 


அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கைது நடவடிக்கையில் அரசு எந்த விதிமுறைகளையும் பின்பற்றபடவில்லை என்று குற்றம்சாட்டினார். பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து எதிர்க்கட்சிகளை மிரட்ட பாஜக அவர்களை பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். 


இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “அமைச்சர் செந்தில் பாலாஜி கைது என்பது ஜனநாயக படுகொலை. மோடி , அமித்சாவை திருப்தி படுத்தவே இந்த வேலையை செய்துள்ளது அமலாக்கத்துறை. இந்திய பொருளாதார குற்றங்களை கண்டறிவது அமலாக்கத்துறை கவனம் செலுத்தி வந்தது. பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து எதிர்க்கட்சிகளை மிரட்ட பாஜக அவர்களை பயன்படுத்தி வருகிறது. 


2024 - ல் நோட்டாவை விட வாக்கு குறைந்து விடும் என்ற அச்சத்தில் இது போன்ற வேலை செய்கிறது பாஜக. 2015 ஆம் ஆண்டு போடப்பட்ட வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை செய்துள்ளது, புகார் கொடுத்தவர்களே  வழக்கை திரும்ப பெற்று விட்டார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு திமுகவை களங்க படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இது போன்ற செய்யப்படுகிறது. நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியின் தோல்வி மறைப்பதற்கு, மத்திய அரசு மேற்கொள்ளும் நாடகங்களில் இது ஒன்று. எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க முடியாமல் முதுகெலும்பு இன்றி இது போன்ற அமைப்புகள் மூலம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 


தேர்தலுக்கு முன் அனுப்பி எதிர்கட்சிகள் மீது பொய் வழக்கு போட்டு அவர்களை முடக்க நினைக்கிறது. இதற்கெல்லாம் அஞ்சி போவது கிடையாது. இன்னும் கூடுதல் வீரியமாக செயல்படுவோம்.பாஜக அரசு மறைந்த முன்னாள் பிரதமர் நேருவுக்கு கூட நோட்டீஸ் அனுப்புவார்கள் என சிவசேனா எம்பி கிண்டலாக கூறியிருந்தார். டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை 9 மணி நேரம் வைத்து சிபிஐ விசாரணை நடைபெற்றது. 


எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூட பேட்டியில் மூலம்,  "முன்னுக்குப் பின் முரணாக உளறி கொட்டியுள்ளார்". செந்தில் பாலாஜி பற்றி பேசுவதற்கு முன்னால் எடப்பாடி பழனிச்சாமி கண்ணாடி முன்னால் தன்னை பார்த்து தனக்கு அந்த யோகிதை இருக்கிறதா என யோசித்து இருக்க வேண்டும். ஊழல் , கொள்ளை , கொலை மீது வேலுமணி , தங்கமணி மீது கத்தி தொங்கும் போது இப்படி முன்னுக்கு பின் முரணாக பேசுவது வெக்கங்கட்ட செயல். தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்த பாஜகவை கண்டிக்க எடப்பாடிக்கு  துப்பு இல்லை. வரும் தேர்தல்களில் அதிமுக அடிமைகளுக்கு தமிழக மக்கள் முடிவை தெரிவிப்பார்கள். 


செந்தில் பாலாஜியை காலையில் அழைத்து செல்லும் போது ஊடகத்தில் பார்த்தேன். வலியால் துடிதுடித்து கொண்டிருந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிசோதனை செய்த பிறகு இவருக்கு ஆஞ்சியோ செய்ய வேண்டும் என்று சொன்னார். ஆஞ்சியோவும் செய்யப்பட்டது.  பின்பு , மூத்த இருதய மருத்துவர் மூலம் விசாரித்து 3 அடைப்புகள் இருப்பதை உறுதி செய்த பின்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். 


செந்தில் பாலாஜியின் மனைவி தனக்கு பழக்கப்பட்ட மருத்துவரிடம், காவிரி மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க வேண்டும் என அவரது மனைவி சொன்னார்” என தெரிவித்துள்ளார்.