தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள  சுவாமிமலை  சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்துக்கள் மட்டுமே விண்ணபிக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பணி விவரம்:


இளநிலை உதவியாளர் – 02
உதவி மின் பணியாளர் – 01
உதவி பரிச்சாரகர் – 02
ஸ்தானிகம் – 01



கல்வித்தகுதி:



இளநிலை உதவியாளர்:


இந்தப் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனத்தில் அதற்கு இணையான படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


உதவி மின் மணியாளர்:


ஐ.டி.ஐ – மின்/மின்கம்பி பணியாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் (ITI – WIreman/Electrician). மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.



உதவி பரிச்சாரகர்:


தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். கோயில்களின் வழக்கங்களுக்கேற்ப சாப்பாடு மற்றும் பிரசாத உணவுகள் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.


ஸ்தானிகம்:


தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆகமப் பள்ளி அல்லது வேத பாட சாலை தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் ஓராண்டு காலம் படித்து தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் இருக்க வேண்டும். 



வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.07.2022ல் 18 வயது பூர்த்தி அடைந்திருக்கு வேண்டும், 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.



ஊதியம் விவரம்:



இளநிலை உதவியாளர்: நிலை 22இ]- இன் படி ரூ..18500 – ரூ.58,600
உதவி மின் மணியாளர்: நிலை18 இன் படி ரூ.16,600 - ரூ.52,400
உதவி பரிச்சாரகர் & ஸ்தானிகம்: நிலை 10 -இன்படி ரூ.10,000 - ரூ.31, 500/-


எப்படி விண்ணப்பிப்பது?


சுவ விவர குறிப்புகளுடன் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்த்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். 


https://drive.google.com/file/d/1khVatT_GluRi6rj_mrIC0dvWbQ2flszO/viewஎன்ற லிங்கை கிளிக் செய்து அறிவிப்பின் முழு விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.



முகவரி:


துணை ஆணையாளர் / செயல் அலுவலர்,


அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில்,


சுவாமிமலை. 


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 15.10.2022 மாலை 05.45 மணிக்குள்  முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும் என்ற அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.




மேலும் வாசிக்க..


Illam Thedi Kalvi Scheme: கொரோனா கற்றல் இழப்பை மீட்டுள்ளது! 'இல்லம் தேடிக் கல்வி'க்கு அமெரிக்க ஆய்வு கொடுத்த பாராட்டு!


TN Cabinet meeting: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் செப்.26-இல் தமிழக அமைச்சரவை கூட்டம்..


சிதம்பரத்தில் 14 வயது சிறுமிக்கு நடந்த திருமணம் - தீட்சிதர்கள் 3 பேர் கைது