கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வீதி பகுதியை சேர்ந்தவர் சோமசேகர். இவர் தீட்சதர்ராக இருந்து வருகிறார். இவரது மகளுக்கு 14 வயதான நிலையில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 24 வயது கொண்ட பசுபதி தீட்சதர் அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் திருமணமான சிறுமி மற்றும் அவரது தந்தையை கடலூர் மாவட்ட டெல்டா பிரிவு காவல் துறையினர் கடலூர் அழைத்து வந்தனர். பின்னர் அந்த சிறுமியிடம் கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள், கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோர் விசாரணையை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த புகாரின் பேரில் திருமணமான சிறுமி மற்றும் அவரது தந்தையை கடலூர் மாவட்ட டெல்டா பிரிவு காவல் துறையினர் கடலூர் அழைத்து வந்தனர். பின்னர் அந்த சிறுமியிடம் கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள், கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோர் விசாரணையை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டனர். தீட்சிதர்கள் 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்:
குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் என்பது குழந்தைத் திருமணத்தைத் தடுக்க இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகும். இது 1891 ஜனவரியில் சட்ட முன்வடிவாக ஆங்கில அரசினால் முன்வைக்கப்பட்டு, 1929 செப்டம்பர் 28ஆம் நாள் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இது சார்தா சட்டம் என்றும் அழைக்கப்பட்டது. இதன்படி, திருமணம் செய்வதற்கு பெண்ணுக்கு பதினான்கு வயதும், ஆணுக்கு பதினெட்டு வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும். 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே, இதுபோன்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவர ஆங்கிலேய அரசு முயன்றது. 1880 குஜராத்தைச் சேர்ந்த, பி.எம்.மலபாரி என்பவர் ஆங்கில அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் ஐந்து வயது பெண் குழந்தைகளுக்கெல்லாம் திருமணம் செய்யும் கொடுமையை அரசு தலையிட்டு உடனே நிறுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் மலபாரி குறிப்பிட்டிருந்தார். இது லண்டன் வரை சென்று, பல விவாதங்களுக்கு உள்ளாகி, இறுதியில் 1891 ஜனவரியில் சட்ட முன்வடிவாக அரசினால் முன்வைக்கப்பட்டது. இச்சட்டம் 1930 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்தது. தற்போது பெண்ணின் திருமண வயது 18 எனவும், ஆணின் திருமண வயது 21 எனவும் மாற்றப்பட்டுள்ளது 12 வயது நிறைவடைந்த பின்பே பெண்களுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்றும், பருவமடைந்த பின்பே உடலுறவுக்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அந்தச் சட்டம் முன்மொழிந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்