தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் காலியாக உள்ள உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை  மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ( Tamil Nadu Medical Service Recruitment Board - MRB) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 15-ம் தேதி கடைசி நாளாகும்.


பணி விவரம்


உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் (Assistant Surgeon (General))


மொத்த பணியிடங்கள் - 2,553


வயது வரம்பு விவரம் :


இந்த பணியிடங்களுக்கு 01/07/2024-ம் படி  18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம். 


ஊதிய விவரம்: 


இந்தப் பணியிடத்திற்கு  ரூ.56,100 முதல் ரூ. -1,77,500 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.  (Pay Matrix Level-22)


கல்வித் தகுதி 



  • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து எம்.பி.பி.எஸ். (MBBS) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • Madras Medical Registration Act, 1914 மருத்துவராக பதிவு செய்து பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

  • 12- மாதங்கள் House Surgeon (CRRI) பணிகாலம் இருக்க வேண்டும். 


தேர்வு செய்யும் முறை:


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு, தனிப்பட்ட நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்




விண்ணப்பிக்கும் முறை:


இதற்கு விண்ணப்பிக்க https://mrbonline.in/  - என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்:


பொதுப் பிரிவினருக்கு ரூ.1,000 ஆகவும் பட்டியலின/ பழங்குடியின பிரிவினருக்கு ரூ. 500 ஆகவும் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


முக்கிய தேதிகள் 




இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு https://www.mrb.tn.gov.in/pdf/2024/AS_Notification_150324.pdf  -  என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.


ஆன்லைன் எழுத்துத் தேர்வு தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்க கடைசி தேதி :15.05.2024




மேலும் வாசிக்க..


Job Alert:பி.எட். முடித்தவரா? கலாஷேத்ரா பள்ளியில் வேலை - முழு விவரம்!


VOC Port Trust Recruitment 2024:பொறியியல் பட்டம் பெற்றவரா?ரூ.1 லட்சம் மாத ஊதியம் - முழு விவரம்!