தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் (VOC Port Trust ) அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
சட்ட அதிகாரி
உதவி செயல் பொறியாளர் (சிவில்)
உதவி செயல் பொறியாளர் (மெக்கானிக்)
கல்வித் தகுதி:
- சட்ட அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- உதவி செயல் பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க சிவில், மெக்கானிக்கல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
பணி காலம்:
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவர் இரண்டு ஆண்டுகால ஒப்பந்தம் அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்படுவர். தேவையெனில் பணிகாலம் நீட்டிக்கப்படும்.
ஊதிய விவரம்:
அரசு விதிகளின்படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.50,000 முதல் 1,60,000 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்,
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். https://www.vocport.gov.in/ - என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
https://ibpsonline.ibps.in/vocpamarc24/ - ல் ஆன்லைனில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
இதற்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ.475, பழங்குடியின / பட்டியலின பிரிவினர், PwD மற்றும் துறைமுகத்தில் பணி செய்யும் உயர் அதிகாரிகள் ஆகியோர் ரூ.100 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் 18% ஜி.எஸ்.டி.-யுடன் சேர்த்து செலுத்த வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம்:
சென்னை, மதுரை திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஆன்லைன் எழுத்துத் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்படும்.
கவனிக்க..
இந்த துறைமுகத்தில் பயிற்சித் திட்டங்களும் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் இணையதளத்தில் உள்ள விவரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறலாம்.
முகவரி:
The Secretary,
V.O.Chidambaranar Port Authority,
Administrative Office Building,
Harbour Estate,
Tuticorin – 628 004.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Notification%20-%20Detailed%20Advt.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 12.05.2024
மேலும் வாசிக்க..
Job Alert: சென்னை ஐ-கோர்ட் வேலைவாய்ப்பு அறிவிப்பு - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம்!