தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் (TN Handloom Weaver Co-operative Society Limited) நிரப்பப்பட உள்ள சந்தையியல் மேலாளர் ( Marketing Manager) பணியிடங்களுகான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கு தகுதியானவர்களும் விருப்பமானவர்களும் விண்ணப்பிகலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்:


சந்தையியல் மேலாளர் (Marketing Manager)- 11


பணியிடங்கள்:


இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சென்னை, கடலூர், கோயம்புத்தூர், மதுரை, செலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர், பெங்களூரூ, மும்பை, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களில் பணியமர்த்தப்படுவர்.


ஊதிய விவரம்:


இந்தப் பணிக்கு மாதம் ரூ.50,000 ஊதியமாகவும் பயண செலவு உள்ள இதர செலவுகளுக்கும் பணம் வழங்கப்படும். 


கல்வித் தகுதி:


சந்தையியல் பிரிவில் எம்.பி.ஏ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பல்கலைக்கழக மானியக் குழு என்றழைக்கப்படும் யூ.ஜி.சி. அங்கீகாரம்பெற்ற ஏதாவதொரு இளங்களை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


மார்க்கெட்டிங் துறையில் குறைந்தது ஐந்தாண்டுகள் பணி அனுபவம் இருப்பது கூடுதல் சிறப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயதுவரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க 15.9.2022 தேதியின்படி 33- வயதுக்க்குள் இருக்க வேண்டும்.


 






தேர்வு செய்யப்படும் முறை:


மார்க்கெட்டிங் பணிக்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.


நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:


Co-optex Head Office,


No.350, Pantheon Road,


Egmore, Chennai - 600 008.


கோ-ஆப்டெக்ஸ் கடையின் கூகுள் மேப் லிங்க்.. https://goo.gl/maps/jeUQ6YL8Hd5uFfWn8


நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 28.9.2022  காலை 11 மணி முதல் ..


அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அறிந்துகொள்ள file:///C:/Users/jansi/Downloads/amP/TN-Co-Optex-Recruitment-Marketing-Manager-Post-Notification.pdf என்ற லிங்கை செய்து பார்க்கவும்.




மேலும் வாசிக்க..


Recrucitment: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு- முழு விவரம் இதோ!


Indian Post: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா? மதுரை அஞ்சல் அலுவலகத்தில் வேலை காத்திருக்கு!


Job Alert : தேசிய வைராலஜி நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? என்ன தகுதி வேண்டும்..? எப்படி விண்ணப்பிப்பது..?