தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் பணியிடங்களை நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
- அலுவலக உதவியாளர்
- இரவுக்காவலர்
கல்வி மற்றும் பிற தகுதிகள்:
அலுவலக உதவியாளார் பணி
இதற்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மிதிவண்டி (சைக்கிள்) ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
இரவுக்காவலர் பணி
இதற்கு விண்ணப்பிக்க எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 01.07.2022- இன் படி பொதுப்பிரிவினர் 34 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். பழங்குடியின பிரிவினர் / ஆதரவற்ற விதவை உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசாணை எார்.303 நிதி (ஊதியக்குழு) துறை நாள்: 11.10.2017, அரசாணை எண்.305 நிதி (ஊதியக்குழு) துறை நாள்: 13.10.2017ப்படி ஊதியம் மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும்.
அலுவலக உதவியாளார் - ரூ.15,700 - ரூ.50,000
இரவுக்காவலர் - ரூ.15,700 - ரூ.50,000/-
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று, பற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அஞ்சலில் விண்ணப்ப படிவத்தினை அனுப்பவேண்டும். சுய முகவரியுடன் கூடிய ரூ.25/-அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை 1(104) inches postal cover ) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
கவனிக்க:
- வயது மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- அரசு விதிகளின்படி மேற்குறிப்பிட்ட இனசுழற்சி முறைப்படி நியமனங்கள் பின்பற்றப்படும்.
- ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் விபரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
- நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்வதற்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.
- விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் தவறு என பரீசீலனையில் கண்டறியப்பட்டால் அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்.
- நியமனத்தை ரத்து செய்வதற்கான அனைத்து அதிகாரமும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு உண்டு.
- தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறிந்து நேர்காணல் கடிதம் (Call letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பம் அணுப்ப வேண்டிய முகவரி :
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 24.04.2023 பிற்பகல் 5.45 மணிக்குள் அலுவலக முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
ஆணையாளர்,
ஊராடி ஒன்றியம்,
கருங்குளம் - 628 809
தூத்துக்குடி மாவட்டம்,
தொலைப்பேசி எண்- 04630- 263235
அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மற்றும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய இணையதளம் www.thoothukudi.nic.in - இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.04.2023 மாலை 5.45 மணி
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2023/03/2023032478.pdf-என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
மேலும் வாசிக்க..