பெரம்பலூரில் உள்ள மத்திய அரசின் வேளாண் அறிவியல் மையத்தில் ஸ்டெனோகிராபர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2023 ஆகும். 


STENOGRAPHER


காலியிடங்களின் எண்ணிக்கை – 1


கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சுருக்கெழுத்து, தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.


DRIVER


காலியிடங்களின் எண்ணிக்கை – 1


கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.


தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.roeverkvk.res.in/assets/images/Application-Format.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


முகவரி : The Chairman,


CAR – KRISHI VIGYAN KENDRA Hans Roever Campus,


Valikandapuram,


Perambalur – 621115.


விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.04.2023


இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.roeverkvk.res.in/assets/images/Recruitment-2023-steno-driver.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்க்கவும். 









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண