தூத்துக்குடி மாவட்டத்தின் சமூக பணியாளர் துறையின் கீழ் செயல்பட்டுவரும் மாவட்ட குழந்தைப் பாதுப்பு பிரிவில் (Child Protection Unit) உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


பணி விவரம்:


சமூக பணியாளர்.


இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் விவரம்:


தூத்துக்குடி மாவட்டக் குழந்தைப் பாதுகாப்பு அலகிற்கு பின்கண்ட பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.


கல்வித்தகுதி அனுபவம் மற்றும் வயது:


பட்டதாரி/முதுநிலைப் பட்டதாரி (10+2+3 மாதிரி)


ஊதிய விவரம்:


தொகுப்பூதியமாக மாதம் ரூ.18536 வழங்கப்பட உள்ளது.


கவனத்தில் கொள்ள வேண்டியவை:


சமூகப்பணி / சமூகவியல், சமூக அறிவியில் ஆகியவற்றில் அங்கீகாகரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


குழந்தை தொடர்பான பணிகளில் ஏற்கனவே பணிபுரிந்திருப்பின் முன்னுரிமை வழங்கப்படும்.


கணினியில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.


வயது வரம்பு:


வயது 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது.


மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கும்போது அதற்கென தனி படிவத்தில் (Prescribed Format) விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கல்வி, வயது முன்அனுபவம் குறித்த சான்றிதழ்களின் நகல்களுடன் 30.09.2022 அன்று மாலை 05.30 பின்கண்ட முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும். விண்ணப்ப படிவத்தில் (https://thoothukudi.nic.in/notice_category/recruitment/) என்ற மாவட்ட இணைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


அதிகாரப்பூர்வ இணையதளம் - https://thoothukudi.nic.in/


விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2022




MBBS BDS Admission 2022: மருத்துவப் படிப்புகளுக்கு செப்.22 முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி?- முழு விவரம்


MBBS Counselling: மருத்துவக் கலந்தாய்வு எப்போது, எப்படி நடக்கும்?- மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் பதில்


Eligibility Certificate: எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. தகுதிச் சான்றிதழ் விண்ணப்பங்கள் நிறுத்தம் - திடீர் அறிவிப்புக்கு காரணம் என்ன?