தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான சஞ்சய் பாபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த செய்திக்குறிப்பில் தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்க உள்ள சட்ட உதவி ஆலோசனை அமைப்பு அலுவலகத்தில் உள்ள 12 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


கள்ளக்குறிச்சி சம்பவம் திட்டமிட்ட வன்முறை போல் தெரிகிறது! பின்னணியில் யார்?...உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!



இந்த காலிப்பணியிடங்கள் குறித்த அனைத்து விரிவான விவரங்கள், விண்ணப்பங்கள் மற்றும் இதர தகவல்கள் https://districts.ecourts.gov.in/dlsa-theni  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


அடுத்த அதிர்ச்சி... சேலம் அரசுப்பள்ளியில் 2வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி!


எனவே, இந்த இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 'தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட கோர்ட்டு வளாகம், லட்சுமிபுரம், தேனி மாவட்டம்' என்ற முகவரிக்கு வருகிற 25-ந்தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். கடைசி தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.