தமிழ்நாட்டை சார்ந்த தொழில்நுட்ப கல்வி பயின்ற மாணவர்கள் பலர் சமூக வலைதளம் மூலமாக மூளைச்சலவை செய்யப்பட்டு கம்போடியா, தாய்லாந்து மற்றும் மியான்மர் நாடுகளிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் “ டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்” (Digital Sales and Marketing Executive) உள்ளீட்டாளர் (Data Entry Operator) வேலை மற்றும் அதிக சம்பளம் என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டு, கால்-சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்ஸி மோசடி (Online scamming) போன்ற சட்டவிரோத செயல்களில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும், அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தெரிய வருகிறது.
Sweet Pongal: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல்- அரசாணை வெளியீடு!
எனவே, இனிவருங்காலங்களில், வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம், வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், பணியின் தன்மை போன்ற விவரங்களை சரியாகவும், முழுமையாகவும் தெரிந்து கொண்டு வெளிநாடுகளுக்கு பணிபுரிய செல்ல வேண்டும். அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிடில், தமிழ்நாடு அரசின் “அயலகத் தமிழர் நலத்துறை” அல்லது குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலர், சென்னை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டிலுள்ள இந்தியத் தூதரகங்களை தொடர்பு கொண்டு, பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்து கொண்டும்.
Abirami: கொண்டாட மறந்த சினிமா.. கமல் செய்த சிறப்பான சம்பவம்.. அபிராமிக்கு குவியும் பாராட்டு!
இந்திய வெளியுறவுத்துறை மற்றும் வேலைக்குச் செல்லும் நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின்படி, வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள்(agents) விவரங்களை www.emigrate.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொண்டும் வெளிநாட்டு வேலைகளுக்கு பாதுகாப்பாக செல்லலாம். மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு, சென்னை குடிப்பெயர்வு பாதுகாப்பு அலுவலக உதவி எண்.90421 49222 அல்லது poechennai1@mea.gov.in, மற்றும் poechennai2@mea.gov.in ஆகிய மின்னஞ்சல்கள் மூலமாகவும் விளக்கம் பெறலாம்.
மேலும், வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்படின், அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் கட்டணமில்லா 24 மணி நேர அழைப்புதவி மையத்தின் 18003093793, 8069009901, 8069009900 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.