வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் ஒரு வருடம் நிறைவு செய்திருத்தலே போதுமானது.

Continues below advertisement

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 30.06.2024 அன்றைய தேதிப்படி குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போருக்கு அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது. தற்போது இத்திட்டத்தின்படி காலாண்டு ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தோல்வி கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.600/-ம், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.900/-ம், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.1200/-ம், பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் படித்து பதிவு செய்தவர்களுக்கு ரூ.1800-ம், மூன்று வருடங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

Continues below advertisement

Sweet Pongal: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல்- அரசாணை வெளியீடு!

சிறுபான்மையினர்  மாணவர்கள் விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பிக்கலாம் - சேருவதற்கான தகுதிகள் என்னென்ன?

மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் ஒரு வருடம் நிறைவு செய்திருத்தலே போதுமானது. இவ்வாறான மனுதாரர்களின் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி மற்றும் அதற்கு கீழான தகுதி வரை பதிவு செய்தவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு    ரூ.600/-ம், மேல்நிலைக் கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.750-ம்,  பட்டதாரிகள் எனில் ரூ.1000-ம், பத்து வருடங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படுகிறது.  

Abirami: கொண்டாட மறந்த சினிமா.. கமல் செய்த சிறப்பான சம்பவம்.. அபிராமிக்கு குவியும் பாராட்டு!

  இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற கீழ்க்காணும் தகுதிகளை பதிவுதாரர்கள் பெற்றிருக்க வேண்டும்.

1. 30.06.2024-ம் தேதி அன்று  நிலவரப்படி ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர்  45 வயதிற்கு மிகாமலும்,  ஏனையோரைப்  பொறுத்த மட்டில்  40 வயதிற்கு  மிகாமலும் இருத்தல் வேண்டும்.

2. மனுதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம்  ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.  மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் குடும்ப ஆண்டு வருமானத்திற்கு உச்ச வரம்பு கிடையாது.

3. பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம்  போன்ற தொழிற்கல்வி பட்டதாரிகள் இந்த உதவித் தொகை பெற தகுதியில்லாதவர்கள்.

இந்த உதவித்தொகை பெறுவதற்கு மேற்காணும் தகுதிகள் உள்ள தேனி  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அனைத்து கலங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் அல்லது தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்புகொண்டு விண்ணப்பத்தினை இலவசமாக   பெற்றுக்  கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola