IAF Recruitment 2024: இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு ஜூலை 8ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அதோடு, பணியிடத் தேவையை பொறுத்து பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்கலாம். 


பணி விவரம்:


அக்னிவீர் வாயு பணியாளர்கள்


அக்னிபத் திட்டம் 


அக்னி பாதை திட்டத்தின் கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் (அக்னி வீர்) என்று அழைக்கப்படுவார்கள். இந்த வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின்  முப்படை எனப்படும் தரைப் படை, கப்பல் படை, விமானப் படைகளில் பணியாற்றுவர். 


அக்னிபாத் திட்டம் மூலம், 17.5 வயது முதல் 21 வயது வரையிலான 45,000 இளைஞர்கள், நான்காண்டு பதவி காலத்துடன் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள். இந்த பதவி காலத்தில், அவர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் அவர்களுக்கு வழங்கப்படும்.


கல்வித் தகுதி: 



  • இதற்கு விண்ணப்பிக்க 10+2 என்ற முறையில் பள்ளிக் கல்வி முடித்திருக்க வேண்டும். 

  • வேதியியல், இயற்பியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

  • +2 வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

  •  மூன்று ஆண்டுகள் பொறியியலில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது இரண்டு ஆண்டுகள் தொழிற்கல்வி படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

  • ஆங்கில பாடத்தில் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர் 21- வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பு குறித்த முழு விவரத்தை அறிவிப்பில் 
https://agnipathvayu.cdac.in/AV/img/upcoming/AGNIVEER_VAYU_02-2025.pdf - தெரிந்துகொள்ளலாம். 


ஊதிய விவரம்: 


இந்தப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயிற்சியின் போது உதவித் தொகையாக மாதம் ரூ.14,600 வழங்கப்படும். அதன்பிறகு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.





அக்னி வீரர்களுக்கு 4 ஆண்டுகள் பணி


4 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, பணிக்கால செயல்திறன் அடிப்படையில், அதிகபட்சமாக 25% பேர் இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர். 4 ஆண்டு காலப் பணிக்குப் பிறகு வெளியேறும் வீரர்களுக்கு, சேவை நிதியும் திறன் சான்றிதழும் வழங்கப்படும்.  


இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு www.airmenselection.cdac.in  -என்ற இணையதளத்தில் அணுகலாம். வேலைவாய்ப்பு அறிவிப்பில் கொடுத்துள்ள ஆவணங்கள் உடன் தகுதியுடைவா்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர், 18-தேதி உடற்தகுதித் தேர்வு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. 


விண்ணப்ப கட்டணம்


இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து ரூ.550 கட்டணமாக செலுத்த வேண்டும்.


Physical Fitness Test (PFT)




விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:



  • விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ https://agnipathvayu.cdac.in/AV/- வலைத்தளத்திற்கு செல்லவும் 

  • முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்

  • தகுதியுள்ள விண்ணப்பதாரர் மட்டும் விண்ணப்பிக்கவும்

  • தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யது ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.07.2024 23:00 மணி வரை 


இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு https://agnipathvayu.cdac.in/AV/img/upcoming/AGNIVEER_VAYU_02-2025.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.