மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அலுவலகங்களில் காலியாக உள்ள ஸ்டெனோகிராஃபர் (Stenographer) பணியிடங்களுக்கான அறிவிப்பை அரசு பணியாளர் தேர்வாணையம் (The Staff Selection Commission) வெளியிட்டிருந்தது. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். தவறவிடாதீங்க.
இந்த பணியிடங்களுக்கு சி மற்றும் டி நிலைத் தேர்வில் (Stenographer Grade "C‟ & D‟ Examination, 2022) நடத்தப்பட உள்ளது.
எப்படி விண்ணபிப்பது?
https://ssc.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
இதற்கான விண்ணப்பக் கட்டணமா ரூ.100 செலுத்த வேண்டும். பழங்குடியினர்/ பட்டியில் பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
இதற்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ கல்லூரில் இருந்து பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஸ்டெனோகிராஃபி திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
வயது வரம்பு :
"சி" நிலை பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 01.01.2021-இன் படி, 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
"டி" நிலை பணிக்கு விண்ணப்பிக்க 01.01.2021 அன்று 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில், தேர்ச்சி பெற்றவர்கள் திறனறிவுத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
திறனறிவு தேர்வு:
ஸ்டெனோகிராஃப்ர் "C" நிலை பணிக்கு கணினியில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும், "D" நிலை பதவிக்கு நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.
முழு விவரம் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_Steno_20082022.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
எழுத்துத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இன்றைக்கு இரவு 11 மணி வரை விண்ணபிக்க நேரம் இருக்கும். மறந்துடாதீங்க.
மேலும் வாசிக்க..