இந்திய உணவுக் கழகத்தில் (Food Corporation of India)  காலியாக உள்ள உதவியாளர், இளநிலை பொறியியாளர், சுருக்கெழுத்தாளர் போன்ற பல்வேறு பணிகளுக்கா வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 5,043 பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


பணி விவரம்:


இந்த அறிவிப்பின் மூலம் மண்டலம் வாரியாக 5043 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும், இளநிலை பொறியியாளர் சிவில் (A); இளநிலை  உதவியாளர்  நிலை III - பொது (D); உதவியாளர் நிலை III- கணக்கு (E); உதவியாளர் நிலை III - டெக்கினிக்கல் (F);  உதவியாளர் நிலை III- உணவு தானிய கிடங்குகள் (G);  உதவியாளர் நிலை III (ஹிந்தி) - H பொறியாளர் - எலெக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினியரிங் (B); சுருக்கெழுத்தாளர் நிலை- 2 (C);ஆகிய பதவிக்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


வடக்கு மண்டலம்- 2388
தெற்கு மண்டலம்- 989 
கிழக்கு மண்டலம்- 768
மேற்கு மண்டலம்- 713 
வட கிழக்கு மண்டலம்- 185 


கல்வித் தகுதி:


உதவியாளர் பதிவிக்கும், பொது & உணவுத் தானிய கிடங்குகளில் இருக்கும் பதவிக்கும், சுருக்கெழுத்தாளர் பதவிக்கும் இளங்கலை பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இளநிலை பொறியாளர் பதவிக்கு பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்:


விண்ணப்பக் கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டும்.  பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 



தேர்வு செய்யப்படுவது எப்படி?


 எழுத்துத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். மேலும், சுருக்கெழுத்தாளர் பதவிக்கு எழுத்துத் தேர்வுடன் திறன் அறிவுத் தேர்வும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு:




விண்ணப்பிக்க கடைசி நாள் :


05.10.2022 மாலை 4 மணி வரை


விண்ணப்பதாரர்  ஒரு மண்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு பணியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.





அறிவிப்பின் முழு விவரத்திற்கு: https://www.recruitmentfci.in/assets/current_category_III/FINAL%20CAT-III%20ADVT%20(2022)%20Final.pdf

 

https://fci.gov.in/ என்ற இணையதள முகவரியில் கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.