TANSIM Recruitment 2022:


தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் அமைப்பில் (Tamil Nadu Startup and Innovation Mission – TANSIM) காலியாக உள்ள Project Associate பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு இம்மாதம் 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 


பணி விவரம்:


Project Associate – Fablabs – Tech Assistant  -3
Project Associate – Investment Initiatives - 2
Project Associate – Incubation & Acceleration -1
Project Associate – Regional Startup Hub -3
Project Associate – Community Initiatives -1
Project Associate – Project Management Unit-3


மொத்த பணியிடங்கள்: 13


பணி இடம்: சென்னை


பணி காலம்:


இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு  மூன்றாண்டு கால ஒப்பந்தம் அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்கப்படும். திறன் அடிப்படையில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித் தகுதி:


* இதற்கு விண்ணப்பிப்பவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிர்வாக திறன் கொண்டவராக இருக்க வேண்டும். ஸ்டார்ட் -அப் நிறுவனத்தின் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


* தொழில்முனைவு திட்டங்களை பிரபலப்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.


* நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். 


* தமிழ்நாடு மற்றும் உலக அளவிலான ஸ்டாட்-அப் துறை எப்படி செயல்படுகிறது என்பது தொடர்பான அறிவு மற்றும் புரிதல் இருக்க வேண்டும்.


* தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் நன்றாக பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.


* உடற்தகுதிச் சான்று சமர்பிக்க வேண்டும். 


ஊதிய விவரம்:


விண்ணப்பதாரர்களின் தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி?


ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்ப படிவத்திற்கு https://forms.zohopublic.in/startuptn/form/TANSIMRecruitment/formperma/4YdsGQ4Scp5IlobJ_FMSnhI7qlDPWT_SHZLSFnJ2LI4 என்ற லிங்கை கிளிக் செய்யவும்.


இதற்கு விண்ணப்ப கட்டணம் ஏதும் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.


இணையதள முகவரி: https://startuptn.in/


வேலைவாய்ப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள careers@startuptn.in 


விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.12.2022


தகுதியானவர்களுக்கு சென்னையில் நேர்காணல் நடைபெறும். அதை தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இது தொடர்பான விவரங்களை காண அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் தகவல்களை பார்த்து தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




மேலும் வாசிக்க.


SBI PO Exam 2022: எஸ்.பி.ஐ. வங்கி பணிக்கான முதல்நிலை தேர்வு தேதி அறிவிப்பு; ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி?