Puducherry Job:


புதுச்சேரியில் தீயணைப்பு துறையின் குரூப்-சி பிரிவில் காலியாக உள்ள 75 பணியிடங்களை நிரப்புவதற்கான் அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.


பணி விவரம்:


Station Officer – 05
Fireman – 58
Fireman Driver – 12


மொத்த பணியிடங்கள் -75 


கல்வித் தகுதி:


ஸ்டேசன் அதிகாரி பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதாவது ஒரு அறிவியில துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக வேதியியல் படிப்பு படித்திருந்தால் பணிக்கு விண்ணப்பிக்க தகுந்தது என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Fireman பணிக்கு  பிளஸ் -2 படித்திருக்க வேண்டும். 


ஃபையர்மேன் டிரைவர் பணிக்கு பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:


ஸ்டேசன் அதிகாரி பணிக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சமாக 27 வயது உள்ளவராக இருக்க வேண்டும்.


ஃபையர்மேன் பணிக்கு விண்ணப்பிக்ககுறைந்தபட்சம் 18  வயது முதல் அதிகபட்சமாக 24
 வயது உள்ளவராக இருக்க வேண்டும்.


ஃபையர்மேன் டிரைவர் பணிக்கு  பணிக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சமாக 32 வயது உள்ளவராக இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:


Station Officer பணிக்கு  Level-5-இன்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
Fireman மற்றும் Fireman Driver பணிக்கு  Level-2-இன்படி மாத ஊதியம் வழங்கப்படும்.


எப்படி விண்ணப்பிப்பது?


இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க https://recruitment.py.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை:


எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.12.2022


அறிவிப்பின் முழு விவரத்திற்கான விவரங்கள்:


ஃபையர்மேன் -https://fire.py.gov.in/viewpdf?url=0&nid=1547


ஃபையர்மேன் டிரைவர்-https://fire.py.gov.in/viewpdf?url=0&nid=1548


ஸ்டேசன் அதிகாரி -https://fire.py.gov.in/viewpdf?url=0&nid=1546




மேலும் வாசிக்க..


SBI PO Exam 2022: எஸ்.பி.ஐ. வங்கி பணிக்கான முதல்நிலை தேர்வு தேதி அறிவிப்பு; ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி?