Puducherry LDC Recruitment 2022: 


புதுச்சேரியில் Department of Personnel and Administrative Reforms-PW துறையில் காலியாக உள்ள 220 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது இதற்கு விண்ணப்பிக்க வரும் 29-ஆம் தேதியே கடைசி நாளாகும்.


பணி விவரம்:


Lower Division Clerk -165
Store Keeper Grade III - 55




மொத்த பணியிடங்கள் -220


கல்வித் தகுதி:


கிளர்க் பணிகளுக்கு விண்ணப்பிக்க 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


அதோடு டெக்னிக்கல் தகுதியான டைப்ரைட்டிங் தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஏதாவது ஒன்று நன்கு தெரிந்திருக்க வேண்டும்.


ஸ்டோர் கீப்பர் கிரேட்-3 பணிக்கு பத்தாவது, 12-ஆம் வகுப்பு அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:


இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 32 வயது உள்ளவராக இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது குறித்து அறிவிப்பில் தெளிவாக உள்ளது.


ஊதிய விவரம்:


இந்தப் பணிக்கு  Level-2 -இன்படி மாத ஊதியம் வழங்கப்படும். 


எப்படி விண்ணப்பிப்பது?


இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க https://recruitment.py.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை:


எழுத்துத் தேர்வு, திறன்றிவு தேர்வுஉடற்தகுதி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.12.2022


அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://recruitment.py.gov.in/recruitment/LDCSK2022/notification என்ற லிங்கை கிளிக் செய்யவும். 




மேலும் வாசிக்க..


KVS Recruitment 2022: கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வேலை வேண்டுமா..? 13 ஆயிரம் பணியிடங்கள்..! இப்பவே அப்ளை பண்ணுங்க..


DRDO Recruitment: டி.ஆர்.டி.ஓ.வில் 1061 பணியிடங்கள்..! விண்ணப்பிப்பது எப்படி..?