பாரத ஸ்டேட் வங்கியின் ப்ரொபேஷனரி அதிகாரிகளுக்கான (Probationary Officers) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. தற்போது, ப்ரொபேஷனரி அதிகாரிகளுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு தேதி மற்றும் அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது.
ஹால்டிக்கெட் ட்வுன்லோடு செய்வது எப்படி?
https://sbi.co.in/ அல்லது https://sbi.co.in/web/careers என்ற இணையதளத்தில் அட்மிட் கார்ட டவுன்லோடு செய்யலாம்.
எஸ்.பி.ஐ. ப்ரொபேஷனரி அதிகாரி வேலைவாய்ப்புக்கான முதல் நிலை தேர்வுக்கான அட்மிட் கார்டு லிங்க்- https://ibpsonline.ibps.in/sbiposep22/cloea_dec22/downloadstart.php
இந்த லிங்க் மூலம் ‘Call Letter' -க்கு தனியாக கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.
அதில் கேட்கப்படும் பதிவு எண் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து கிளிக் செய்யவும்.
உங்களுடைய அட்மிட் கார்டு ஸ்கிரில் காட்டும்.
அட்மிட் கார்டை பிரிட்ண்ட் அவுட் மற்றும் PDF- ஆக சேவ் செய்து கொள்ளவும்.
SBI PO Prelims Exam- முதல்நிலை தேர்வு தேதி:
ப்ரொபேஷனரி அதிகாரிகளுக்கான முதல் நிலை தேர்வு வரும் 17, 18, 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
கலை 9 மணி முதல் 10 மணி வரை, நண்பகல் 11.30 முதல் 12.30 மணி வரை, மதியம் 2 மணி முதல் 3 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை என்ற ஷிப்டுகளில் தேர்வுகள் நடைபெறுகின்றன.
குறிப்பு:
எஸ்.பி.ஐ.-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்னும் 'Call letter’ டவுன்லோடு செய்வதற்கான லிங்க் அறிவிக்கப்படவில்லை. அதில் 'Call letter Download will start soon’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்டேட்களுக்கு இணையதளத்தில் வெளியாகும் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
பணி விவரம்:
ப்ரொபேஷனரி அதிகாரிகள் (Probationary Officers) - 1,673
கல்வித் தகுதி:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம்/ கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 21 வயதிற்கு குறைவாகவோ, 30 வயதுக்கு மேற்பட்டவர்களாகவோ இருத்தல் கூடாது.
எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்:
இந்தப் பணிக்கு மூன்று நிலைகளில் தேர்வு நடத்தப்படு அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். கணினி வழியில் தேர்வு நடைபெறும்.
கவனிக்க :
ஆன்லைன் பதிவு செய்தல்: 22.09.2022 முதல் 12.10.2022 வரை; அன்றிரவே விண்ணப்பிக் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும்;
தேர்வுக்கான பயிற்சி : நவம்பர்/டிசம்பர் 2022
ஆன்லைன் தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்தல்: டிசம்பர் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் இருந்து
முதன்மை எழுத்துத் தேர்வு : 2023 ஜனவரி/பிப்ரவரி
திறனறிவுத் தேர்வு: 2023 பிப்ரவரி/மார்ச்
நேர்முகத் தேர்வு : 2023 பிப்ரவரி/மார்ச்
இறுதி பட்டியல்: 2023 மார்ச்
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் ரூ.750ஆகும். பட்டியலின/ பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மூலம் மட்டுமே விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
ஊதிய விவரம்:
ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ. 41,960 வழங்கப்பட உள்ளது.
முதல் நிலை தேர்வு:
முதன்மை தேர்வு:
இறுதித் தேர்வு:
எழுத்து தேர்வில் மைனஸ் மார்க் இருக்கிறதா:
எழுத்துத் தேர்வில் தவறான பதில்களுக்கு 1/4 மார்க் மைனஸ் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
அதிகாரப்பூர்வ வலைதள முகவரி- https://bank.sbi/careers
https://www.sbi.co.in/careers
அறிவிப்பின் முழு விவரம் அறிய https://sbi.co.in/documents/77530/25386736/210922-Advt_English+PO+22-23_21.09.2022.pdf/c4433bc8-ee48-5526-2ce9-f67012156a7d?t=1663763128309 லிங்கை கிளிக் செய்யவும்.