இந்திய வானிலைத் துறையில் ( India Meteorological Department (IMD))அமைச்சகம் சாரா,  குரூப் 'பி'  பதவிகளுக்கான (Group ‘B’ Non-Gazetted, Non-Ministerial post)  பணிகளுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (staff selection commission) வெளியிட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பணி விவரம்:


இந்த அறிவிப்பின் மூலம் 900 விஞ்ஞான உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


கல்வித் தகுதி:


குறைந்தபட்சம் இயற்பியலை ஒரு பாடமாக கொண்டிருக்க வேண்டும். அறிவியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம்  ஆகிய ஏதேனும் ஒரு பாடத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். அல்லது எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:


 18-10-2022 அன்றைய நிலையில் பழங்குடியின/ பட்டியலின பிரிவினர் 35 வயதுக்குள்ளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 33 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மேலும், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின் படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களை அறிவிப்பில் காணலாம்.


விண்ணப்பக் கட்டணம்:


இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.100 ஆகும்.  பெண்கள், பழங்குடியின/ பட்டியலின பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாக வழங்க வேண்டும்.


விண்ணப்பிப்பது எப்படி?


இத்தேர்வுக்கு sscnic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை:  


கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல்  தயாரிக்கப்படும்.


தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.10.2022


அறிவிப்பின் முழு விவரம் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_IMD_30092022.pdf


என்ற லிங்கை கிளிக் செய்யவும்.




மேலும் வாசிக்க..


மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு: எப்படி விண்ணப்பிக்கலாம்? விவரம் இதோ!


சமூக பணியாளர் துறையில் வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!


எஸ்.எஸ்.சி. தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு..இலவச பயிற்சி வகுப்புகள் உங்களுக்காக.. முழு விவரம் இதோ!