SSC JE recruitment 2024: எஸ்.எஸ்.சி ஜே.இ விண்ணப்பங்களில் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் ஏப்ரல் 23 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் திருத்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.சி தேர்வுக்கான முதல் தாள்  தேர்வானது ஜூன் 4 முதல் ஜூன் 6 வரையிலான நாட்களில் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  


எஸ்.எஸ்.சி - ஜே.இ:


பணியாளர் தேர்வாணையம் (SSC) ஜூனியர் இன்ஜினியர் (JE) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறையை மார்ச் 28 ஆம் தேதி  தொடங்கியது.  இதையடுத்து, ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.


இந்த முறை நடைபெறும் ஆட்சேர்ப்பில், 968 ஜூனியர் இன்ஜினியர் (சிவில், மெக்கானிக்கல் & எலக்ட்ரிக்கல்) பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 19 வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் முதல் தாள்  தேர்வானது ஜூன் 4 மற்றும் ஜூன் 6 ஆம் தேதிகளுக்கு இடையில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டாம் தாளுக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.


விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள, ஏப்ரல் 22 ஆம் தேதி இணையதளம் திறக்கப்பட்டு ஏப்ரல் 23 ஆம் தேதி முடிவடைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு நடைமுறை:




தேர்வு செயல்முறையானது, இரண்டு தாள்களை உள்ளடக்கிய கணினி அடிப்படையிலான தேர்வை உள்ளடக்கியது (தாள் I மற்றும் தாள் II).


இரண்டு தாள்களும் குறிக்கோள் வகை, பல கேள்விகளை மட்டுமே கொண்டிருக்கும்.


இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளில் வினாத்தாள் இடம்பெரும் என தெரிவிக்கப்பட்டது.


தாள்-I ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.25 மதிப்பெண்களை எதிர்மறையாகக் குறிக்கும், அதே நேரத்தில் தாள்-II ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு 1 மதிப்பெண்களைக் எதிர்மறையாகக் குறிக்கும் .


கட்டணம்:


விண்ணப்பக் கட்டணம் ₹ 100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இருப்பினும், பெண்கள் மற்றும் பட்டியல் சாதியினர் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST), பெஞ்ச்மார்க் குறைபாடுகள் உள்ள நபர்கள் (PwBD), மற்றும் இடஒதுக்கீட்டிற்குத் தகுதியான முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 


Also Read: PhD Admission: இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு; யுஜிசி அறிவிப்பு