மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission-SSC)  4300 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க நாளையே கடைசி நாள்.


பணி விவரம்:


எல்லை பாதுகாப்பு படை,மத்திய தொழில் பாதுகாப்பு படை,  மத்திய ரிசர்வ் போலீஸ் படை , இந்தோ - திபெத் எல்லை போலீஸ் ,  சாஸ்த்ரா சீமா பால்,  தில்லி போலீசில் சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


ஊதியம்:


ரூ.35, 400 முதல் ரூ.1,1,2,400 வரை மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. 


கல்வித் தகுதி:


 இளநிலைப் படிப்பில் எதாவதொரு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


வயதுவரம்பு:


 01.01.2022 தேதியின் அடிப்படையில் 20 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பில் சலுகை உள்ளது. முழு விவரத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.


தேர்வு செய்யப்படும் முறை:


மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.  உடல் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ சோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.


எழுத்துத் தேர்வு மையம்:


சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார்,  ஆகிய மாவட்ட மற்றும் புதுச்சேரியில் நடைபெறும். 


விண்ணப்பக் கட்டணம்:


விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும்.  பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


எப்படி விண்ணப்பிப்பது:


www.sss.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.08.2022


மேலும் விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_SICPO_10082022.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.


இந்தப் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவர். 




மேலும் வாசிக்க..


FCI Jobs: டிகிரி முடித்தவரா? இந்திய உணவு கழகத்தில் வேலைவாய்ப்பு! முழு விவரம் இதோ!


TAHDCO Medical Coding Training: 100% வேலை நிச்சயம்; ரூ.70,000 வரை ஊதியம்; 2014 முதல் 2022 பட்டதாரிகள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்..


TNPSC வெளியிட்டுள்ள COMMUNITY OFFICER பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்- உடனே விண்ணப்பிங்க..