மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவு கழகத்தில் (Food corporation of india)  மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பொதுதுறை நிறுவனத்தில்  சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் உள்ளிட்ட பிரிவுகளிலும், கணக்கியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 113 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. விருபமுள்ளவர்கள்  26.09.2022க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


பணி விவரம்:









காலியிடங்களின் எண்ணிக்கை : 19


கல்வித் தகுதி :


அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இங்கே குறிப்பிட்டுள்ள பணியிடங்கள் ஒவ்வொன்றுக்கும் தனிதனி கல்வித் தகுதி இருக்கிறது. 


ஊதியம்:


ரூ. 40,000 முதல் ரூ. 1,40,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. 


வயது வரம்பு: 


குறிப்பிடப்பட்டுள்ள சில  பணியிடங்களுக்கு 28 வயதுக்கு மிகாமலும், சிலவற்றிற்கு 38 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். முழு அறிவிப்பின் மூலம் முழு விவரங்களை தெரிந்துகொள்ளவும்.


தேர்வு செய்யப்படும் முறை :


இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை :


https://www.recruitmentfci.in/current_category_two_main_page.php?lang=en  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி :


26.09.2022


அறிவிப்பின் முழு விவரத்தை அறிய https://www.recruitmentfci.in/assets/current_category_II/Advt.%20No.02-2022-FCI%20Category-II.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்யவும். 




மேலும் வாசிக்க.. NMDC: தேசிய கனிம வளர்ச்சி கழகத்தில் 10-ம் வகுப்பு டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு; கூடுதல் விவரம்...


மேலும் வாசிக்க.. Group 5A Notification: அரசு ஊழியர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


IRCON Recruitment : இந்திய ரயில்வே கட்டுமான ஆணையத்தில் வேலை.. விண்ணப்பிப்பது எப்படி?