வேலைக்காக காத்திருக்கிறீர்களா? மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission-SSC)

  இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


பணி விவரம்:


இளநிலை பொறியாளர் (Junior Engineer)


ஊதியம்:


இந்தப் பணிகளுக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.


கல்வித் தகுதி:


 சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் பொறியியல் துறைகளில் 3 ஆண்டு டிப்ளமோ, பி.இ., பி.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் இருந்தால் சிறந்தது.


வயதுவரம்பு:


அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, 01.01.2022 தேதியின்படி 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை:


மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.


எழுத்துத் தேர்வு விவரம்:


எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களை கொண்டிருக்கும். 


தாள் I - கொள் குறிவகை கேள்விகளுக்கு (Objective Type Questions) பதிலளிக்கும் வகையில் இருக்கும்.


தாள் II - விரிவாக விடையளிக்கும் படியாக இருக்கும்.


எழுத்துத் தேர்வு மையம்:


தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்கள் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும். 


விண்ணப்பக் கட்டணம்:


விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும்.  பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிககளுக்கு  விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


எப்படி விண்ணப்பிப்பது:


www.sss.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.09.2022


மேலும் விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_eng_je_12082022.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.


இந்தப் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவர்.