காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தகலைச்செல்வி மோகன் தகவல்.


100 சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


தமிழ்நாடு அரசு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 100 சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை தமிழ்நாடு முழுவதும் நடத்திட அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், காஞ்சிபுரம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை வாலாஜாபாத் மாசிலாமணி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் 04.11.2023 அன்று நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.


செய்ய வேண்டியது என்ன ?


இம்முகாமில் 100 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துக் கொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர். அது சமயம் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ, 12வது மற்றும் 10ஆம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். 18 முதல் 35 வயது வரை உள்ள வேலை நாடுநர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 04.11.2023  அன்று காலை 9.00 மணிக்கு வாலாஜாபாத் மாசிலாமணி முதலியார் மேல்நிலைப்பள்ளியில் நேரில்  வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறும், இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 044-27237124 என்ற தொலைபேசி எண் வாயிலாக கேட்டறிந்து பயன் பெறுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.


 


கூடுதல் தகவல்கள்


 


தொடர்பு எண்கள்


தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் பெயர்


நிர்மலா தேவி ( JUNIOR EMPLOYMENT OFFICER / CO - ORDINATOR )


தொலைபேசி எண்


9790916605


இமெயில் ஐடி


dd.decgc.kpm@gmail.com



தொடர்பு எண்கள்


தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் பெயர்


அசோக்  ( ASSISTANT - CO - ORDINATOR )


தொலைபேசி எண்


8122140214


இமெயில் ஐடி
dd.decgc.kpm@gmail.com


 




 


தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) 


தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது, சென்னையில் உள்ள ஸ்மைல் ஸ்கில் இந்தியா ( Smile Skills India ) பயிற்சி நிலையத்தின் மூலமாக திறன்பேசி தொழில்நுட்பவியலாளர் பெண்களுக்கும் மற்றும் உற்பத்தி ஊழியர் பயிற்சி ஆண்  மற்றும் பெண் இருபாலருக்கும் ( Smart Phone Assembly Technician (Female only) and Assembly Operator Program (Male and Female) போன்ற பயிற்சியினை தாட்கோ சார்பாக அளிக்கப்படவுள்ளது.


தர சான்றிதழ்
 
இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும். பத்தாம் வகுப்பு படித்த  18 முதல் 35 வயது வரை உள்ள மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 12 நாட்கள் ஆகும். மேலும் சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாணாக்கர்களுக்கு (SSC Approval Certificate and Course Graduation Certificate) அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும். 


தனியார் நிறுவனங்கள் 
 
மேலும் இப்பயிற்சியினை பெற்றவர்கள் (Salcomp, Foxconn, Flex Electronics Kanchipuram , Chennai) போன்ற தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பயிற்சியில் வெற்றிகரமாக முடிக்கும் மாணக்கர்களுக்கு ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18,000/- முதல் ரூ.18,500/- வரை பெற வழி வகை செய்யப்படும்.


விண்ணப்பிப்பது எப்படி ?


இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான தங்கும் விடுதி மற்றும் பயிற்சிக் கட்டணம் தாட்கோ வழங்கும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர், கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.