தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SPORTS DEVELOPMENT AUTHORITY OF TAMIL NADU) ஆலோசகர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிக்கான தகுதிகளை கீழே காண்போம்.


பணி விவரம்:


ஆலோசகர் 


Consultant (Sports Performance Management) - 2


Consultant (Information Technology) - 1


Consultant (Social Media Management) - 1


 Consultant (Accounts) - 2


மொத்த காலியிடங்கள்: 6


கல்வித் தகுதி:


அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகத்தில் CA, ICWA, CA Inter, BE, B.Tech, MBA, PGDM ஆகிய பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:


இந்தப் பணிகளுக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.60,000  வரை ஊதியம் வழங்கப்படும். 


வயது வரம்பு:


1.12.2022 தேதியின் படி, குறைந்தபட்சம் 23 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 


எப்படி விண்ணப்பிப்பது?


இதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளமான www.sdat.tn.gov.in - என்ற முகவரியின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களும் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.  பணியிடங்களுக்கு நேரடி நியமன தேர்வு நடைபெறுகிறது. 


விண்ணப்பிக்கும் முறை:


 www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சுய விவரங்களை பூர்த்தி செய்து, அதோடு தேவையான கல்வி உள்ளிட்ட ஆவணங்களை அப்லோடு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.12.2022


வயது வரம்பு, இடஒதுக்கீடு, பணி அனுபவம் உள்ளிட்ட விவரங்கள் பற்றி அறிந்து கொள்ள https://www.sdat.tn.gov.in/pdf/Notification%20-%20Consultant%20-%20DECEMBER%202022.pdf- என்ற லிங்கை கிளிக் செய்து அறிவிப்பின் விவரத்தை தெரிந்து கொள்ளலாம். 




மேலும் வாசிக்க.


TNSURB Result: வெளியானது 3,522 பணிகளுக்கான 2ம் நிலை காவலர் தேர்வு முடிவுகள்..!


UIDAI Recruitment : ஆதார் அலுவகத்தில் பணி ; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!