இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் காலியாக உள்ள 100 ’கிரேடு ஏ' உதவி மேலாளர்  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் ஜனவரி 3- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


எஸ்.ஐ.டி.பி.ஐ. வங்கி:


இந்தியாவில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில், நிலையை உயர்த்துதல், அதற்கான நிதி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றிற்கு முதன்மை வளர்ச்சி நிதி நிறுவனமாக உள்ளது இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி. ( small industries development bank of india – SIDBI).இவ்வங்கி கடந்த 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டது.  உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது.


இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன்களை எளிதாக்குவதோடு, இதன் வளர்ச்சியை மேம்படுத்தப்படுகிறது. இவ்வங்கியில் பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் அவ்வப்போது இதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகும். இந்நிலையில் தற்போது உதவி மேலாளர் கிரேடு ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இதற்கான தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை? வயது  வரம்பு? குறித்த அனைத்து தகவல்களையும் இங்கே முழுமையாக தெரிந்துக்கொள்வோம்.


இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி பணிக்கானத் தகுதிகள்:


பணி விவரம்:


உதவி மேலாளர் 


மொத்த காலிப்பணியிடங்கள் - 100




கல்வித்தகுதி:


விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வணிகவியல் மற்றும் பொருளாதார துறை படித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அறிவிக்கப்படும் அல்லது பொறியியல், சட்டம் ஆகிய துறையில் இளங்கலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிவில், எலக்ட்ரிகல், மெக்கானிக்கல் படித்தவர்களுக்கு என்றால் கூடுதல் சிறப்பு.  பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்திருக்க வேண்டும்.


 



வயது வரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சமாக 21 வயது கொண்டவராகவும், 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:


இந்த பணிக்கு தொடக்க ஊதியமாக ரூ. 28,150 ஆக வழங்கப்படும். மேலும், திறன் அடிப்படையில் ரூ.70,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


இந்திய சிறு தொழில்கள் வங்கிப் பணிக்கு விண்ணப்பிக்க  https://www.sidbi.in/en/careers/page/79   என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.


பின்னர்,  ஆன்லைன் விண்ணப்பத்தில் இப்பணியிடங்களுக்கான என்னென்ன ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள கேட்கப்பட்டுள்ளதோ அதனை பதிவேற்றம் செய்ய வேண்டும்.  


தேர்வு செய்யும் முறை:


 எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


எழுத்துத் தேர்வு திட்டம்:




ஆன்லைன் விண்ணப்பிக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் – 03.01.2023


ஆன்லைன் தேர்வு – ஜனவரி / பிப்ரவர், 2023


முக்கிய நாட்கள் :




மேலும்,  இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://sidbi.in/files/careers/SIDBI_Officers_GR'A'_General_Stream_2022.pdf- என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.