RRB Exam Dates 2024: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில், உதவி லோகோ பைலட், இளநிலை பொறியாளர், ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர், இளநிலை பொறியாளர், டிப்போ மெட்டீரியல் கண்காணிப்பாளர் மற்றும் இரசாயன மற்றும் உலோகவியல் உதவியாளர் பதவிகளுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது.


இதில், உதவி லோகோ பைலட் தேர்வு நவம்பர் 25 முதல் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வு (Assistant Loco Pilot - ALP) மூலம், 18,799 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.


தேர்வு முறை எப்படி? ( RRB ALP Recruitment 2024: Selection Process)


கணினி வழியில் நடைபெறும் தேர்வுடன் 5 கட்டங்களாக தேர்ந்தெடுக்கும் செயல்முறை நடைபெறுகிறது. குறிப்பாக,


1. கணினி வழி முதல்நிலைத் தேர்வு


2. கணினி வழி இரண்டாம் நிலைத் தேர்வு


3. கணினி வழியில் திறனாய்வுத் தேர்வு (CBAT)  


4. சான்றிதழ் சரிபார்ப்பு


5. மருத்துவப் பரிசோதனை


அதேபோல ஆர்பிஎஃப் எனப்படும் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் தேர்வு, டிசம்பர் 2 முதல் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


இந்தத் தேர்வும் பல படிநிலைகளில் நடைபெறுகிறது. குறிப்பாக கணினி அடிப்படையிலான தேர்வு (CBT), உடற் தகுதி தேர்வு (PET)/ மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு (DV) ஆகியவை நடைபெறுகிறது.


தேர்வு அட்டவணை, தேர்வு நடைபெறும் இடம் ஆகியவை ஆர்ஆர்பி இணையதளம், குறுஞ்செய்தி மற்றும் இ- மெயில் ஆகியவை மூலம் தகுதிவாய்ந்த தேர்வர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


தொழில்நுட்ப வல்லுநர் தேர்வு (Technician Exam)


டெக்னிஷியன் தேர்வு டிசம்பர் 16 முதல் 26ஆம் வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு அக்டோபர் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய தேர்வர்கள் இந்த காலகட்டத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.  


அதேபோல இளநிலை பொறியாளர், டிப்போ மெட்டீரியல் கண்காணிப்பாளர் மற்றும் இரசாயன மற்றும் உலோகவியல் உதவியாளர் பதவிகளுக்குத் தேர்வு டிசம்பர் 6 முதல் 13ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தத் தேர்வு மூலம் 7,951 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.


கூடுதல் விவரங்களுக்கு: https://www.rrbchennai.gov.in/