வங்கிப் பணியிலிருந்து வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்களுக்கு பாரத ஸ்டேஸ் வங்கி (State bank Of India)  மீண்டும் ஒரு புதிய வாய்ப்பை வழங்க நோக்கில் வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. எஸ்.பி. ஐ. வங்கி குறிப்பிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணபிக்க இன்றே கடைசி நாள். விண்ணபிக்க மறந்துடாதீங்க.. எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன பணிகளுக்கு வேலைவாய்ப்பு இருக்கு? உள்ளிட்ட தகவல்களை இக்கட்டுரையில் காண்போம்.


எஸ்பிஐ வங்கியில் ஓய்வு பெற்ற 60 முதல் 63 வயதுடையவர்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் பணி வழங்கப்பட உள்ளது. Channel Manager Facilitator -Anytime Channels,  Channel Manager Supervisor Anytime Channels (CMS-AC) மற்றும்  Support Officer- Anytime Channels (SO-AC) ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.  இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க வரும்  இன்று( ஜூன் 7)  கடைசி நாள்.


எஸ்.பி.ஐ. அறிவித்திருக்கும் AGM IT- Outbound Engineer பணியிடத்திற்கு விண்ணபிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள டிவிட்டர் அறிவிப்பில் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


 






மொத்த காலிய பணியிடங்கள்: 641 காலி பணியிடங்கள் 


விண்ணப்பிக்க தகுதி: 


இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஒருவர் 60 வயது முதல் 63 வரை இருக்க வேண்டும். மேலும் அவர்கள் எஸ்.பி.ஐ. அல்லது மற்ற வங்கிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்க வேண்டும். 


விண்ணப்பிக்கும் முறை:


இதற்காக விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.sbi.co.in என்ற தளத்தில் சென்று இந்த பணிக்கான அறிவிப்பாணையை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 


ஊதிய விவரம்:


Channel manager Facilitator-Anytime Channels (CMF_AC) பணிக்கு மாத சம்பளம் 36,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. Channel Manager Supervisor Anytime Channels (CMS-AC) மற்றும்  Support Officer- Anytime Channels  ஆகிய இரண்டு பணிகளுக்கும் மாத சம்பளம் 41,000 ரூபாயாக வழங்கப்படுகிறது. 


 


தேர்வு விவரம்:


இந்த பணிகளுக்கு விண்ணபிக்கம் நபர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அதிலிருந்து சிலர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு நடைபெறும் நேர்காணலுக்கு 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் பணி வழங்கப்படும் என்று எஸ்பிஐ அறிவிப்பாணையில் தெரிவித்துள்ளது. 


அறிவிப்பு குறித்த முழு விவரம் அறிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்:


https://sbi.co.in/documents/77530/25386736/17052022_Final+ATM+Anytime+Channel+AD+17.05.2022.pdf/50f3c3eb-4a8a-c95a-9fd0-0368ad53dfa4?t=1652798432029


 


 


ஆல் தி பெஸ்ட்! வேலைக்காக காத்திருப்பவர் என்ரால் தயங்கமால் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.




மேலும் படிக்க: மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் வேலை;ரூ. 50,000-க்கு மேல் சம்பளம்.. விண்ணப்பிக்க உடனே செக் பண்ணுங்க..




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண