தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்
காலி பணியிடங்கள்:
பயிற்சி பொறியாளர், Trainee Engineer- 38
திட்ட பொறியாளர்/அலுவலர் Project Engineer/officer: - 17
கல்வித்தகுதி:
எலக்ட்ரானிக்ஸ்,சிவில், மெக்கானிக்கல் ஆகிய பொறியியல் பாடப் பிரிவுகளில் பல்கலைக்கழக மானியக் குழு அல்லது AICTE ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். திட்ட அலுவலர் பதவிக்கு MBA/PGHRM/MSW போன்ற முதுநிலை படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
திட்ட அலுவலர் பதவி – 32 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும்
பயிற்சி பொறியாளர் பதவி- 28 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும்
மேலும் அரசு விதிமுறைகளின் படி இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வயதுகளில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜீன் 1 ஆம் தேதி (01-06-2022)
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர் Pre Registartion for Recruitment of Trainee and Project Engineers/ Officers for Panchkula Unit - 2022 (google.com) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும் போது 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பட்டம் பெற்றதற்கான சான்றிதழ், புகைப்படம் மற்றும் கையொப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.மேலும் நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.
கட்டணம்:
திட்ட பொறியாளர்/ அலுவலர் பதவிக்கு – ரூ. 472
பயிற்சி பொறியாளர் பதவிக்கு – ரூ. 177
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயார் செய்யப்படும்.
ஒப்பந்தப் பணி:
விண்ணப்பதாரர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது, இப்பணிகளானது ஒப்பந்த பணியாகும். திட்ட பொறியாளர் பதவிக்கு 3 ஆண்டுகள் ஒப்பந்த பணிகளும், பயிற்சி பொறியாளர் பதவிக்கு 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு தேர்வு செய்யப்படுவர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.