இந்திய அஞ்சல் துறையில் 38,926 காலியிடங்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தது.  இது நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள கிராமின் தாக் சேவக் (Gramin Dak Servaks) பணியிடங்களுக்கானது. தமிழ்நாட்டில் மட்டும் 4,310 காலியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த வாய்ப்பை தவறவிடாதீர். இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.


இந்தக் காலிபணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மூலம் கம்யூட்டர் உருவாக்கும் மெரிட் லிஸ்ட் வைத்து தேர்வு செய்யப்படுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதனால் நீங்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் 460 அல்லது 400க்கு மேல் எடுத்திருந்தால், நிச்சயமாக விண்ணப்பிக்கலாம். 


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:


பணி: Gramin Dak Servaks -கிராமின் தாக் சேவக் 


மொத்த காலியிடங்கள்: 38,926 பணியிடங்கள்


தமிழ்நாடு - 4,310 பணியிடங்கள்


 


தகுதி:


 அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்தந்த மண்டலங்களுக்கு விண்ணபிப்பவர்கள் மாநிலங்களின் உள்ளூர் மொழி பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனம், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.


வயதுவரம்பு:


18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை:


ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் விகிதங்களின்படி தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதனடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை:


www.indianpost.gov.in  https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்:


பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினர்கள், மகளிர், Transwomen ஆகியோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.



முழு அறிவிப்பிற்காக லிங்க- 


https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Model_Notification.pdf




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண