பாரத ஸ்டேட் வங்கியின் ப்ரொபேஷனரி அதிகாரிகளுக்கான (Probationary Officers) வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது.  எஸ். பி.ஐ.-ன் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, 1,673 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே (12.10.2022) கடைசி நாள்.


பணி விவரம்:
 
ப்ரொபேஷனரி அதிகாரிகள் (Probationary Officers) - 1,673


கல்வித் தகுதி:


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம்/ கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு:




இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 21 வயதிற்கு குறைவாகவோ, 30 வயதுக்கு மேற்பட்டவர்களாகவோ இருத்தல் கூடாது.


எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்:


இந்தப் பணிக்கு மூன்று நிலைகளில் தேர்வு நடத்தப்படு அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். கணினி வழியில் தேர்வு நடைபெறும்.


 




கவனிக்க :


ஆன்லைன் பதிவு செய்தல்: 22.09.2022 முதல் 12.10.2022 வரை; அன்றிரவே விண்ணப்பிக் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும்;


தேர்வுக்கான பயிற்சி : நவம்பர்/டிசம்பர் 2022


ஆன்லைன் தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்தல்:  டிசம்பர் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் இருந்து


முதல்நிலை எழுத்துத் தேர்வு: டிசம்பர் 17,18,19,20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.


 முதன்மை எழுத்துத் தேர்வு : 2023 ஜனவரி/பிப்ரவரி


திறனறிவுத் தேர்வு: 2023 பிப்ரவரி/மார்ச்


நேர்முகத் தேர்வு : 2023 பிப்ரவரி/மார்ச்


இறுதி  பட்டியல்: 2023 மார்ச்


விண்ணப்பக் கட்டணம்:


 




விண்ணப்பக் கட்டணம் ரூ.750ஆகும். பட்டியலின/ பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு விண்ணப்பக் கட்டணம்  செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மூலம் மட்டுமே விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.


 


ஊதிய விவரம்:


ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ. 41,960 வழங்கப்பட உள்ளது.


முதல் நிலை தேர்வு:




முதன்மை தேர்வு:


 


 




இறுதித் தேர்வு:




எழுத்து தேர்வில் மைனஸ் மார்க் இருக்கிறதா:


எழுத்துத் தேர்வில் தவறான பதில்களுக்கு 1/4 மார்க் மைனஸ் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 




 


தேர்வு செய்யப்படும் முறை:




 


அதிகாரப்பூர்வ வலைதள முகவரி-  https://bank.sbi/careers 
https://www.sbi.co.in/careers


அறிவிப்பின் முழு விவரம் அறிய https://sbi.co.in/documents/77530/25386736/210922-Advt_English+PO+22-23_21.09.2022.pdf/c4433bc8-ee48-5526-2ce9-f67012156a7d?t=1663763128309 லிங்கை கிளிக் செய்யவும். 




 மேலும் வாசிக்க...


SSC CGL: 20 ஆயிரம் பணியிடங்கள்; கால அவகாசத்தை நீட்டித்த எஸ்.எஸ்.சி.! கவலையில்லாமல் விண்ணப்பிக்கலாம், மக்களே!


Jobs Alert : சட்டம் படித்தவரா நீங்கள்? மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? எப்படி விண்ணப்பிப்பது..?


TCS : 20,000 புதியவர்களுக்கு வேலை...பணி சலுகை அளிக்கப்பட்ட அனைவரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்...டிசிஎஸ் தகவல்