இந்திய ஸ்டீல் ஆணையத்தில் (The Steel Authority of India Limited (SAIL)) எக்ஸிக்யூடிவ் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிப்பு வெளியாகியுள்ளது. இதன்மூலம் 333 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


பணி விவரம்:


மேலாளர், உதவி மேலாளர், ஆப்ரேட்டர் டெக்னீசியன், மைனிங் ஃபோர்மேன், தீயணைப்பு டிரெயினி, எலக்டிரிக்கல், மெக்கானிகல், சிவில் உள்ளிட்ட இன்சினியரிங் உள்ளிட்ட பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


 



 


கல்வித் தகுதி:


இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து தெரிந்து கொள்ளவும்.


 




ஊதியம்:


உதவி மேலாளர் பணிக்கு மாதம் ரூ.50,000 முதல் 1,60, 0000 வரை வழங்கப்படும். மற்ற பணிக்கு 26,600 ரூபாய் முதல் 38,000 வரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது. S-1 level பணிக்கு ஊதியம் மாறுபடும். அறிவிப்பின் விவரத்தில் இருக்கும்.




 


வயது வரம்பு:


ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு  வேறுபடும். ஆனால், இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.




தேர்வு செய்யப்படுவது எப்படி?


எழுத்துத் தேர்வு / கணினி அடிப்படையிலான சோதனை (சிபிடி) மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இரண்டு மணி நேர தேர்வு நடைபெறும். 


விண்ணப்பிப்பது எப்படி?


ஸ்டீல் நிறுவனத்தின்  அதிகாரப்பூர்வ வகைதள பக்கத்தில் sailcareers.com “Careers” என்பதை கிளிக் செய்யவும்.


விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து தேவையான தகவல்களை பூர்த்தி செய்யவும்.


விண்ணப்ப கட்டணம்:


உதவி மேலாளர் பணிக்கு பொதுப்பிரிவினர் ரூ.700 ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் ரூ.200 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.


மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தை sailcareers.com காணவும். 


அறிவிப்பின் முழு விவரம் https://ucanapplym.s3.ap-south-1.amazonaws.com/sail/pdf/ADVT%2001_2022_TECHNICAL2222.pdf


என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.




மேலும் வாசிக்க..


TNPSC : இளநிலை பட்டதாரிகளுக்கு வாய்ப்பு.. 217 பணியிடங்கள்.. அப்ளை பண்ணுங்க.. அடிச்சு தூக்குங்க..


TNPSC குரூப்- 3 தேர்வு அறிவிப்பு; கல்வித்தகுதி , ஊதியம் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் இதோ..


TNPSC Recruitment: தலைமைச் செயலகத்தில் அரசுப்பணி: ரூ.2.05 லட்சம் ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி?