விழுப்புரம் மாவட்ட சுகாதார சங்கம் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட சுகாதார சங்கம் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில், காலி பணியிடங்களுக்கு 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் ஆன ஊதியத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது. இரு தரப்பிலும் ஒரு மாத கால அறிவிப்பின் கீழ் ரத்து செய்யக் கூடியவை.
பணியின் பெயர் :
மருத்துவ அலுவலர், ஆய்வுக்கூட நுட்புணர், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்.
1.மருத்துவ அலுவலர்(Medical officer ):
மாத சம்பளம்: 60,000
கல்வித்தகுதி : எம்பிபிஎஸ் (MBBS ) பட்டயம் மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
காலிப்பணியிடத்தின் எண்ணிக்கை - 1
2. ஆய்வுக்கூட நுட்புணர்(Sputum microscopist ):
மாத சம்பளம்: ₹13,000
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு,12ஆம் வகுப்பு மற்றும் ஆய்வக நுட்புணர் பட்டம் அல்லது பட்டயம். கணினி பயன்பாடு சான்றிதழ் அவசியம்.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 5 காலி பணியிடங்கள்.
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்(STS);
மாத சம்பளம்: ₹19, 800 ரூபாய்
கல்வித் தகுதி :
இளங்கலை பட்டப்படிப்பு அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்நோக்கு சுகாதார பணியாளர் Sanitary health inspector அனுபவம் மற்றும் காசநோய் சுகாதார பார்வையாளர் அனுபவ சான்றிதழ், கணினி பயன்பாடு சான்றிதழ் அவசியம். இரு சக்கர ஓட்டுநர் உரிமம்.
காலி பணியிடம் - 1
மேலும் விருப்பமாய்ந்த தகுதியுடைய,விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதிக்கான சுயவிபரம், ஆதார் கார்டு ஜெராக்ஸ், தகுதிக்கான சான்றிதழ் நகல் மற்றும் 10 ரூபாய் தபால் ஒட்டிய சுய விலாசமிட்ட அஞ்சல் உறை இணைத்து,எந்த பணியிடத்திற்கான விண்ணப்பம் என்று குறிப்பிட்டு அனுப்பவேண்டும்.
இந்த காலி பணியிடங்கள் மாறுதலுக்கு உட்பட்டது. மாநில சுகாதார சங்கம் என்டிஇபி(NTEP )-யின் வழிகாட்டுதல்படி தொகுப்பு ஊதியம் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் விழுப்புரம் மாவட்டம் பொதுமக்களாகிய விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி: தேர்வுக்குழு , துணை இயக்குனர் மருத்துவப் பணிகள் (காசநோய் ), மாவட்ட காசநோய் மையம். அறை எண் -15
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 27.1.2025 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.