இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவாடானை ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


இரவுக் காவலர்


கல்வி மற்றும் பிற தகுதிகள்


இதற்கு விண்ணப்பிக்க எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். 


ஊதிய விவரம்


இரவுக்காவலர் -  ரூ. 15,700 - ரூ.50,000/- ( திருவாடானை)


விண்ணப்பிக்கும் முறை:



  • இதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சுய விவர குறிப்பு, தேவையான ஆவணங்களின் நகல்களுடன் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

  • விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமைச் சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்ப வேண்டும்.

  • விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

  • கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த விண்ணப்பதாரர்களுக்கு வட்டாட்சியரிடம் பெற்ற சான்றின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும். 


வேலைவாய்ப்பு தொடர்பான மேலும் தகவலுக்கு https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2023/12/2023121473.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 19.01.2024 மாலை 5.45 வரை 


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி


ஆணையாளர் / வட்டார வளர்ச்சி அலுவலர்


ஊராட்சி ஒன்றியம்,


திருவாடானை.


இராமநாதபுரம் - 623 407 


மகளிருக்கான வேலைவாய்ப்பு


சென்னை, பாடியிலுள்ள லூகாஸ் டி.வி,எஸ்.  நிறுவனத்தின் உற்பத்தி பிரிவில் பயிற்சி பணியாளர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


பாடி லூகாஸ் கிளைக்கு கலை மற்றும் அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், பி.காம்., பி.சி.ஏ., பி.பி.ஏ. உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு உற்பத்தி பிரிவில் பயிற்சி பணியாளர்களுக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது. 


யாரெல்லாம் பங்கேற்கலாம்?









தொழிற்சாலையில் இருந்து 10கி.மீ. சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


உதவித்தொகை


இதற்கு தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சி பணியாளர்களுக்கு தகுதிக்கேற்ப மாதம் ரூ.15,000 முதல் ரூ.16,000 வரை உதவித்தொகை வழங்கப்படும்.


PF, ESI, Canteen, சீருடை, பாதுகாப்பு ஷூ, மருத்துவம் மற்றும் போக்குவரத்து வசதி ஆகியவை செய்து தரப்படும். 


விருப்பமுள்ளவர்கள் நேர்காணலுக்கு, அனைத்து சான்றிதழ்களுடன் 2 பாஸ்போர்ட் புகைப்படம், ஆதார் கார்டு நகல்கள் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும்.


நேர்காணல் நடைபெறும் இடம்:


லூகாஸ் டி.வி.எஸ். லிமிடெட்,


பாடி, 


சென்னை - 600 050


தொடர்புக்கு - 7358105162 / 9003585772 


12.01.2024 வரை நேர்காணலுக்கு செல்லலாம்.


2250 பணியிடங்கள்; ரயில்வே துறையில் வேலை


நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையில் சப்- இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள், ரயில்வே பாதுகாப்பு துறை, ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை ஆகிய பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது. மேலும் வாசிக்க..


IAF Recruitment 2022: இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு, அதாவது போர் அல்லாத பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி,6-ம் தேதி கடைசி நாளாகும். அதோடு, பணியிட தேவையை பொறுத்து பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..மேலும் வாசிக்க..