ஈரோடு மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை, மாவட்ட நலச்சங்கம் சார்பில் அம்மாவட்டத்தில் உள்ள துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் அலுவலகம், அரசு மருத்துவமனை, வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வரும் திட்டங்களில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்



  • சித்த ஆலோசகர் - ஆரம்ப சுகாதார நிலையம் - சிறுவலூர், புளியம்பட்டி

  • டேட்டா ப்ராசசிங் உதவியாளர் - AD (SBHI) / DDHS, Erode

  • தெரப்யூட்டிக் உதவியாளர் - (Govt., PHC Siruvalur,. P. Puliyampatty)

  • பிசியோதெரபிஸ்ட் - (Govt.PHC Thingalur)

  • பாதுகாப்பு அலுவலர் - (CEmONC Erode GH)

  • MPHW சித்தா (Govt.PHC Alamapalayam, Athani, K.N.Palayam, vellode,Thamaraipalayam, Elumathur, Cennimalai, Thingalur.)

  • MMU க்ளீனர்  (Govt PHC Sivagiri)


கல்வித் தகுதி



  • சித்த ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க BSMS படித்திருக்க வேண்டும். 

  • டேட்டா ப்ராசசிங் உதவியாளர் பணிக்கு கம்யூட்டர் சயின்ஸ்  இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • தெரப்யூட்டிக் உதவியாளர் பணிக்கு விண்னப்பிக்க நர்சிங் தெரபியில் டிப்ளமோ  படித்திருக்க வேண்டும். 

  • பிசியோதெரபிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க Physiotherapist துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

  • பாதுகாப்பு அலுவலர் பணிக்கு 8-வது படித்திருந்தால் போதும்.

  • MPHW பணிக்கு விண்ணப்பிக்க 8-வது தேர்ச்சியுடன் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

  • MMU க்ளீனர் பணிக்கு விண்ணப்பிக்க  8-வது தேர்ச்சியுடன் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 


ஊதியம் விவரம்



  • சித்தா ஆலோசகர் - ரூ.40,000/-

  • டேட்டா ப்ராசசிங் உதவியாளர் - ரூ.20,000/-

  • தெரப்யூட்டிக் உதவியாளர் - ரூ.15,000/-

  • பிசியோதெரபிஸ்ட் - ரூ.13,000/-

  • பாதுகாப்பு அலுவலர் - ரூ.8,500/-

  • MPHW சித்தா - ரூ. 300/ ஒரு நாளுக்கு

  • MMU க்ளீனர்- ரூ.8,500/- 


தெரிவு செய்யப்படும் முறை


இந்த வேலைக்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். 


விண்ணப்பிப்பது எப்படி?


விண்ணப்ப படிவத்துடன் தேவையான ஆவணங்களின் நகல்களை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி


நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், 


மாவட்ட நலவாழ்வு சங்கம்,திண்டல், 
 
ஈரோடு மாவட்டம் - 638 012


விண்ணப்பிக்க கடைசி தேதி - 18.01.2024