Jobs: ரூ.90,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு... வாய்ப்பை தவறவிடாதீர்கள்

ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ துறைகளில் இருக்கும் 25 சீனியர் ரெசிடெண்ட் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

Continues below advertisement

puducherry JIPMER Recruitment 2025 of Senior Resident :

Continues below advertisement

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. பல்வேறு மருத்துவ துறைகளில் இருக்கும் 25 சீனியர் ரெசிடெண்ட் காலிப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது.

பணியின் விவரங்கள்

ஜிப்மரில் இருக்கும் நரம்பியல், நரம்பு அறுவை சிகிச்சை, பொது மருத்துவம், அவசர சிகிச்சை, மைக்ரோபலோலஜி, கண் மருத்துவம், எலும்பியல், மருந்தியல், பிசியோதெரபி, கதிர்வீச்சு புற்றுநோயியல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ துறைகளில் உள்ள 25 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இதில் பொதுப் பிரிவில் 13 இடங்கள், OBC ஓபிசி பிரிவில் 6 இடங்கள், SC எஸ்சி பிரிவில் 3 இடங்கள், ST எஸ்டி பிரிவில் 1 இடம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பிரிவில் 2 இடம் என மொத்தம் 25 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

பணியிடங்களுக்கான வயது வரம்பு

இந்த பணியிடங்களுக்கு 31.03.2025 தேதியின் படி, விண்ணப்பதார்கள் அதிகபடியாக 45 வயது வரை கடந்து இருக்கக்கூடாது. மத்திய அரசின் வயது வரம்பு தளர்வு உள்ளது.

கல்வித் தகுதி

இப்பணியிடங்களுக்கு அந்தந்த துறைகளில் MD/MS/DNB ஆகிய முதுகலை மருத்துவப் படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

தொகுப்பூதியம்

இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.90,000 மாதம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

ஜிப்மரில் உள்ள சீனியர் ரெசிடெண்ட் காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் வீடியோ கான்பரன்சிங் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 31.01.2025 அன்று நேர்காணல் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை

ஜிப்மரில் உள்ள சீனியர் ரெசிடெண்ட் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://jipmer.edu.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்டி/ எஸ்சி பிரிவினர் ரூ.250 செலுத்தினால் போதும். மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க கடைசி நாள் 25.01.2025 மாலை 4.30 மணி வரை, நேர்காணல் 31.01.2025 அன்று நடைபெறும்.

Continues below advertisement
Sponsored Links by Taboola