விழுப்புரம்: திண்டிவனம் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 19.07.2025 தேதி நடைபெற உள்ளது.
திண்டிவனத்தில் வேலை வாய்ப்பு முகாம்
தேதி : 19-07-2025 சனிக்கிழமை
இடம் : புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - திண்டிவனம்.
நேரம் : காலை 08.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.
வயது: 18 வயது முதல் 35 வயது வரையிலான வேலை நாடுபர்கள் கலந்து கொள்ளலாம்.
கல்வி தகுதிகள் : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி முடித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம்.
மேலும், 150க்கு மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான 20,000க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம் முகாமில் ஆண், பெண் இரு பாலரும் கலந்து கொள்ளலாம்.
விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் அளவு போட்டோ, கல்விச்சன்றுகள், ஆதார் அட்டை மற்றும் சுயக்குரிப்பு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வரவேண்டும்.
சிறப்பு அம்சங்கள் :
- வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை பதிவு.
- அரசு போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்கான பதிவு.
- மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள்.
- இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு.
- அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்ய வழிகாட்டுதல்கள்
இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in இணையத்தில் Candidate Login-60 User ID, Password உருவாக்கிக்கொள்ள தங்களது கைபேசிக்கு வரும் OTP ஐ பயன்படுத்தி பதிவு செய்துகொள்ளவும், மீண்டும் User ID, Password -ஐ பயன்படுத்தி உட்சென்று தங்களுடைய கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை முழுமையாக உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளலாம். தங்களது கல்வித்தகுதி குறித்த விவரங்களை பதிவு செய்து இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.