தஞ்சாவூர்: குறைந்த பட்ச கல்வித்தகுதி... சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு இருக்கு. 28 பணியிடங்கள் நிரப்ப இருக்காங்க. இன்னும் ஒருவாரம்தான் இருக்கு. உடனே அப்ளை பண்ணுங்க. ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு குறித்து அறிவிச்சு இருக்காங்க தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி? அப்படின்னு விவரமான தகவல்கள் உங்களுக்காக.
ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 28 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 25.07.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Haemoglobinopathy Counsellor காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Bachelors degree in Sociology / Psychology / Social Work / Diploma in GNM / B.Sc Nursing படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 18,000 Special Educator for Behavioural Therapy காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Bachelors /Master's degree in Special Education in Intellectual Disability படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 23,000 Audio Metric Assistant காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Diploma in Hearing Language and Speech (DHLS) படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 17,250 Radiographer காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: B.Sc.Radiography படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 13,300 MMU Driver காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 13,500 MMU Cleaner காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 8,500 Sanitary Worker காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 8,500 Multi Purpose Hospital Worker காலியிடங்களின் எண்ணிக்கை: 12 கல்வித் தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 8,500 Siddha - Multi Purpose Hospital Worker காலியிடங்களின் எண்ணிக்கை: 5 கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: தினசரி ரூ. 300 Siddha - Therapeutic Assistant (Female & Male) காலியிடங்களின் எண்ணிக்கை: 3 கல்வித் தகுதி: Diploma Nursing Therapy படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 15,000 தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2025/07/17522281361005.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். முகவரி: நிர்வாக செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், திண்டல், ஈரோடு மாவட்டம், ஈரோடு - 638012 விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.07.2025. இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு. சட்டுன்னு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பயன் பெறுங்கள்.