தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் காஞ்சிபுரம், நெல்லை, சென்னை அகிய இடங்களில்  நாளை (19.05.2023)தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான ஆதாரங்களை ஊக்குவிக்கும் வகையில் அரசின்  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

காஞ்சிபுரம், சென்னை, நெல்லை ஆகிய இடங்களில் தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே, எப்போது நடைபெறுகிறது குறித்த தகவல்களை கீழே காணலாம்.

இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை கிண்டியில் ஆலந்தூர் சாலையில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடைபெறுகிறது. 

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடைபெறுகிறது. 

தொடர்புக்கு... 044-27237124 (காஞ்சிபுரம்)

நெல்லை

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10:30  மணி முதல் முகாம் நடைபெறுகிறது

யாரெல்லாம் பங்கேற்கலாம்?

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 12-வது, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் கலை அறிவியல் துறை, தொழில்நுட்ப பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் ஆகியோர் பங்கேற்கலாம்.

இதில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை.

இளைஞர்கள் தேவையான ஆவணங்கள் மற்றும் சுயவிவரங்களுடன் இந்த முகாமில் பங்கேற்கலாம்.

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்: 19.05.2023 / வெள்ளிக்கிழமை


மேலும் வாசிக்க..

Job Alert: டிகிரி படித்தவர்களா நீங்கள்? அணு ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?

Job Alert: தமிழில் எழுத, படிக்க தெரியுமா? ரூபாய் 50 ஆயிரம் சம்பளம்; என்ன வேலை? எப்படி விண்ணப்பிப்பது?