திருப்பூர் மாவட்டம் அருகே காங்கயம், சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் காலியாக உள்ள வெளித்துறை மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நேரடி நியமனம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
- வழக்கு எழுத்தர்
- சீட்டு விற்பனை எழுத்தர்
- தட்டச்சர்
- காவலர்
- தோட்டக்காரர்
- திருவலகு
- கூர்க்கா
- உதவி மின் பணியாளர்
கல்வி மற்றும் பிற தகுதிகள்
- வழக்கு எழுத்தர், சீட்டு விற்பனை எழுத்தர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தட்டச்சர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழ்,ஆங்கில ஆகிய துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் படித்திருக்க வேண்டும்.
- காவலர், தோட்டக்காரர், திருவலகு, கூர்க்கா ஆகிய பணிகளுக்கு தமிழில் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- உதவி மின் பணியாளார் பணிக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின் / மின் கம்பிப்பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- மின் உரிமம் வழங்கல் வாரியத்திடம் 'H'சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
- வழக்கு எழுத்தர் -ரூ.18,500 - ரூ.50,600
- சீட்டு விற்பனை எழுத்தர் -ரூ.18,500 - ரூ.50,600
- தட்டச்சர் -ரூ.18,500 - ரூ.50,600
- காவலர் -ரூ.15,900 - ரூ.50,400
- தோட்டக்காரர் -ரூ.15,900 - ரூ.50,400
- திருவலகு -ரூ.15,900 - ரூ.50,400
- கூர்க்கா - ரூ.15,900 - ரூ.50,400
- உதவி மின் பணியாளர் - ரூ.16,600 - ரூ.52,400
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய தகுதிச்சான்றுகளுடன் நேரடியாகவோ தபால் மூலமாகவோ கோயில் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
உதவி ஆணையர் / செயல் அலுவலர்,
சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
சிவன்மலை - 638701
காங்கயம் வட்டம்
திருப்பூர்
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் - 17.05.2023
https://sivanmalaimurugan.hrce.tn.gov.in/ - என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
https://sivanmalaimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php - என்ற இணைப்பை க்ளிக் செய்து பணி குறித்த கூடுதல் விவரங்களை காணலாம்.