சென்னை வில்லிவாக்கத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வர சுவாமி கோயிலில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு நேரடி நியமனம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது ஒப்பந்தம் அடிப்படையிலானது என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

ஓதுவார்

கல்வித் தகுதி:

தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்கவேண்டும். சமய, அரசு நிறுவனங்களால் நடத்தப்படும் தேவாரப் பாட சாலையில் 3 ஆண்டுகள் பயின்றமைக்காக வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

ரூ.12,600 - 39,900 மாத ஊதியமாக வழங்கப்படுகிறது. 

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய தகுதிச்சான்றுகளுடன் நேரடியாகவோ தபால் மூலமாகவோ கோயில் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

அகத்தீஸ்வர சுவாமி கோயில்,

வில்லிவாக்கம்,

சென்னை -49 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 06.06.2023 மாலை 5.45 மணி வரை 

இந்தப் பணி தொடர்பான முழு விவரத்தினை https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/171/document_1.pdf-என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


மேலும் வாசிக்க..

Job Alert: தமிழில் எழுத, படிக்க தெரியுமா? ரூபாய் 50 ஆயிரம் சம்பளம்; என்ன வேலை? எப்படி விண்ணப்பிப்பது?

Walk In Interview: தகுதித் தேர்வுகள் இல்லை; மாசம் 40 ஆயிரம் சம்பளம்; ஆவின் அலுவலகத்தில் நாளை நேர்காணல்..!