நாமக்கல் மாட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஆய்வுக்கூடத்தில் பணிபுரிவதற்கான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்தப் பணிக்கான அறிவிப்பு செய்தித்தாள் விளம்பரத்தில் மருத்துவக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.


பணியின் பெயர்:


லேப் டெக்னீசியன் - II (Lab Technician Grade- II)


மொத்த பணியிடங்கள்: 31


மாத ஊதியம்:


இந்தப் பணிக்கு மாத ரூ.15,000 தொகுப்பூதியம் - Consolidated Pay அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது.


வயது வரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் முதல்  59 வயதிக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி:


பல்கலைக்கழக மானியக் குழு என்றழைக்கப்படும் யு.ஜி.சி-யின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம்/ கல்லூரி ஆகியவற்றில் வேதியியல் அல்லது உயர் வேதியியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


 kings Institute of Preventive medicine அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் இரண்டு ஆண்டுகளை கொண்ட பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:


முதல்வர்,


அரசு மருத்துவக் கல்லூரி,


எண்: 353, பெருந்திட்ட வளாகம்,


சிலுவம்பட்டி (அ),


நாமக்கல்,


நாமக்கல் மாவட்டம் - 637 003




விண்ணப்பத்தோடு கல்வித்தகுதிக்கு தேவையான சான்றிதழ், சாதிச் சான்று, ஆதார் கார்டு உள்ளிட்டவைகளில் நகல்களை இணைத்து அஞ்சல் அனுப்ப வேண்டும்.


 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:  07.10.2022


இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் அதிகாரப்பூர்வ தகவல்களை இக்கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ள செய்தித்தாள் விளம்பரத்தில் காணலாம். 


எல்லாம் செயல் கூடட்டும்!




மேலும் வாசிக்க.. 


RSS Rally: ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்ததை திரும்பப்பெற வேண்டும் - திருமாவளவன் எம்.பி மனுதாக்கல்..


ICC Rankings: உலக சாம்பியன் ஆஸி.யை வீழ்த்திய இந்தியா.. டி20 தரவரிசையில் நடந்தது என்ன தெரியுமா?


CM Stalin: நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளை தவிர்க்கவும்: திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்