நாகபட்டினம் மாவட்டம் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பொதுசுகாதார ஆய்வகத்தில் காலியாக உள்ள ஒரு நுண்ணுயிரியாளர் பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பிட உள்ளது. இது தொடர்பாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது விவரங்களை காணலாம்.
பணி விவரம்
நுண்ணுயிரியாளர் (Microbiologist)
கல்வித் தகுதி
இதற்கு விண்ணப்பிக்க மைக்ரோபயோலாஜி துறை படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். கல்வித் தகுதி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2024/02/2024020882.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
ஊதிய விவரம்
இதற்கு மாத ஊதியமாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படும்
விண்ணப்ப கட்டணம்
இதற்கு விண்ணப்ப கட்டணம் இல்லை என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சுயவிவர குறிப்புடன் தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாகவோ நேரிலோ சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
Executive Secretary,
District Health Society,
O/o Deputy Director of Health Services,
Collectorate 1st Entrance,
Nagapattinam-611003.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 20.02.2024
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2024/02/2024020882.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
கடலோர காவல் படையில் வேலை
இந்திய கடலோர காவல் படையில் (Indian Coast Guard) காலியாக உள்ள’ Navik’ (General Duty) பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 260 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணி விவரம்
Navik - 260
கல்வித் தகுதி:
நாவிக் - ஜென்ரல் டியூட்டி பதவிக்கு மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து 12-ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதம், இயற்பியல் பாடங்களில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 22 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இந்தப் பணிகளுக்கு Pay level 3-இன் படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கும் முறை:
இந்தப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு,மருத்துவத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில், தேர்ந்தெடுக்கபபட்டவர்கள், இந்திய கடற்படை மாலுமிகளின் பயிற்சி மையமான ஐஎன்எஸ் சில்கா-வில் பயிற்சிக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.
தெரிவு செய்யும் முறை
இதற்கு பயோமெட்ரிக் முறையில் சரிபார்ப்பு, எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இதற்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்வு பாடத்திட்டம்
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் ரூ.300- ஐ செலுத்த வேண்டும். பட்டியலின , பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மட்டுமே கட்டணத்தை செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://joinindiancoastguard.cdac.in/cgept/- என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.02.2024 மாலை 5.30 மணி வரை
அறிவிப்பின் முழு விவரத்திற்கு -https://joinindiancoastguard.cdac.in/cgept/careerOpportunity/navik/gd- என்ற லிங்கை க்ளிக் செய்து காணவும்.
மேலும் வாசிக்க..
Job Alert: செங்கல்பட்டில் அரசு தற்காலிக ஆசிரியர் வேலை - விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள் யார் ?
TANGEDCO: டிப்ளமோ படித்தவரா? ’டான்செட்கோ’வில் தொழில்பழகுநர் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?